சிவகார்த்திகேயனுக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா? வெளியான சுவாரஸ்யமான தகவல்..!

நடிகர்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் தற்போது கொண்டாடப்படும் நடிகராக உள்ளார். ரஜினி, விஜய்க்கு அடுத்து அதிக குழந்தை ரசிகர்களையும், குடும்ப ரசிகர்களையும் கொண்ட நடிகராக வலம் வருகிறார். இதை விஜய்யே ஒரு மேடையில் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறிய வண்ண இருக்கின்றனர். தற்போது காரைக்குடியில்
SK20
படப்பிடிப்பில் பிஸியாக உள்ள சிவகார்த்திகேயன் அப்படக்குழுவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுவார் என்று தெரிகிறது.

இது மட்டும் நடக்காம இருந்திருந்தா இவங்க கல்யாணம் நடந்திருக்காது : ரஜினி ஓபன் டாக்

பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் கைவசம் அயலான், சிங்கப்பாதை, SK20 ஆகிய படங்கள் இருக்கின்றது. மேலும் தமிழிலும், தெலுங்கிலும் உருவாகும்
SK
20 படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்ததென்ற தகவல் வெளியாகியுள்ளது. டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான சிவகார்த்திகேயன் பல பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது ஒரு படவிழை தொகுத்து வழங்கும் போது இயக்குனர் பாண்டிராஜும் அந்த படவிழாவில் பங்கேற்றுள்ளார்.

சிவகார்த்திகேயனின் யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையை வெளிப்படுத்தும் திறன் பாண்டிராஜிற்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அப்போது தான் இயக்கும்
மெரினா
படத்திற்கான ஹீரோ தேடலில் இருந்த இயக்குனர் பாண்டிராஜிற்கு சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கருதி அவரை அணுகினார். அதன் பிறகு தான் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – மன இறுக்கத்திற்கு பேராறுதல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.