ஜிஎஸ்டி நிலுவை, கரோனா நிவாரணம் ரூ.25,714 கோடியை மத்திய அரசு தரவில்லை; தமிழக உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: தமிழகத்தின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி நிலுவை, கரோனா நிவாரணம் ரூ.25,714 கோடியை மத்திய அரசு தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் பேசியிருப்பதாவது: திமுக அரசு அமைந்தால் என்னவெல்லாம் செய்கிறோம் என சொன்னோமோ, அதில் பெரும்பாலானவாக்குறுதிகளை இந்த 8 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம். இந்த ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் சிந்தனை. வாய்ப்புகளும் வளங்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருக் கும் மக்களுக்கும் சரிசமமாக போய்ச் சேர வேண்டும். இதில் எந்த சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடும் இருக்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது, அங்கு இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் போய்ச் சேருவதற்கு பதில், அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி.அதுதான் திராவிட சிந்தனை. நாங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் இந்த சிந்தனையின் அடிப்படையில்தான் உருவாக்கப்படுகிறது.

பால் விலை லிட்டருக்கு ரூ.3குறைப்பு, பெண்களுக்கு இலவசபேருந்து பயணம், தமிழக அரசுவேலைகளில் தமிழருக்கு முன்னுரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் ஆகியவற்றின் மூலம் சமூகநீதி என்றால் அது தமிழகம்தான் என்பதை நாட்டுக்கே காட்டினோம். பட்டியலின, பழங்குடி மக்களின் கல்வி,முன்னேற்றத்துக்கு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்தோம். இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் என்று மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி, அரசின் அணுகுமுறையில் புதியமாற்றத்தை கொண்டு வந்துள் ளோம்.

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சொல்லப்பட்ட பொய்யை இன்று சுக்குநூறாக உடைத்துள்ளோம். திமுக ஆட்சியில்தான் ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.1,789 கோடி மதிப்புள்ள 180ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடியே, கோயில் சீரமைப்புக்காக ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்க ஆரம்பித்துள்ளோம்.

ஆனால், மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகமக்களின் ஒற்றுமையை ஒன்றுமேசெய்ய முடியவில்லை என்று வெறுப்பு இருக்கத்தான் செய்யும்.சமூகநீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டும் நம் முயற்சிகளுக்கு எதிராக பலவிதமான சவால்களை மத்திய அரசு முன்வைக்கிறது. கரோனா நேரத்தில்கூட தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.16,725 கோடி ஜிஎஸ்டி நிலுவையை இழுத்தடிக்கின்றனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வரவேண்டிய கரோனா நிவாரண நிதி ரூ.8,989 கோடியும் தரப்படவில்லை.

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த சலுகையும், உதவிகளும் இல்லை. வைரத்துக்கு வரியை குறைத்துள்ளனர். நூறு நாள் வேலை திட்டத்துக்கான நிதியை குறைத்து திட்டத்தையே கேள்விக்குறியாக்கி விட்டனர்.

இதன் நீட்சிதான் நீட் தேர்வு.நிறைய செலவழித்து பயிற்சி வகுப்புகளுக்கு செல்பவர்களுக்குத்தான் பெரும்பாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. இதனால், வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. இது பெரிய சமூக அநீதியாகும். இந்த அநீதியை எதிர்த்துதான் சட்டப்பேரவையில், நீட் வேண்டாம் என்று சட்டத்திருத்தம் செய்தோம். அந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அவர்அதை திருப்பி அனுப்புகிறார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டத்தை தடுக்க நினைப்பது ஜனநாயக படுகொலை. முந்தைய ஆட்சி மாதிரிஇந்த அநீதிக்கு எல்லாம் நாம் துணை போக மாட்டோம். நமது உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம். இனியும் ஒன்றாகத்தான் இருப்போம் என்பதை இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு அவர்களுக்கு காட்டட்டும். மாநில உரிமைக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உள்ளாட்சிகளிலும் நம் ஆட்சி தொடரட்டும்.

இவ்வாறு முதல்வர் பேசியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.