தனுஷ் கூட இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா ? இது அவங்களுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ..!

நடிகர்
தனுஷ்
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சோகங்களை மறக்க தற்போது தன் முழு கவனத்தையும் படத்தின் மீது செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்த தனுஷ் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அவரை அணுகி சமாதானம் செய்ய முயற்சிப்போரை தான் ஷூட்டிங்கில் இருப்பதாக கூறி புறக்கணித்து விடுகிறாராம் தனுஷ்.

விவாகரத்தை அறிவித்தபோது ஹைதராபாத்தில்
வாத்தி
படப்பிடிப்பில் இருந்தார் தனுஷ். அதேசமயம்
ஐஸ்வர்யா
தான் இயக்கும் ஆல்பம் பாடல் விஷயமாக ஹைதராபாத்தில் தான் இருந்தார். அதன் பின் சென்னைக்கு வந்த தனுஷ் தன் அண்ணன்
செல்வராகவன்
குடும்பத்தினரோடு நேரம் செலவிட்டார். சில நாட்கள் ஓய்வில் இருந்த தனுஷ் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்துள்ளார்.

செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படப்பிடிப்பிலும், தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாத்தி படப்பிடிப்பிலும் மாறிமாறி நடித்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் தற்போது வாத்தி படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருக்கும் தனுஷின் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

ஒருவழியாக ராசியான ரஜினி -தனுஷ்..வெளியான சூப்பர் தகவல்..!

தனுஷுடன் அவரது மூத்த மகன் யாத்ராவும் உடனிருந்தார். மேலும் ஹைதராபாத்தில் ஒரு பிரபல ஹோட்டலில் தனுஷ் உணவருந்தும் புகைப்படமும் வெளியானது. அந்த புகைப்படத்தில் தனுஷுடன் ஒரு இளம் பெண்ணும் உணவருந்துவார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த பெண் யார் என கேள்வி கேட்டு வந்தனர்.

தற்போது அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் விவரம் வெளியாகியுள்ளது. தனுஷுடன் அமர்ந்து உணவருந்தும் அந்த பெண் தனுஷின் ஆடை வடிவமைப்பாளராம். தனுஷின் பல படங்களுக்கு அவருக்கு அந்த பெண் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது நானே வருவேன் மற்றும் வாத்தி ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் அந்த பெண்ணும் படப்பிடிப்பிற்கு தனுஷுடன் சென்றிருக்கிறார். படப்பிடிப்பின்போது அவர்கள் மதிய உணவிற்காக அந்த ஹோட்டலுக்கு சென்று உணவருந்தியபோதுதான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பங்கர் ராஜு வெற்றி விழாவில் பாடி அசத்திய அனூப் ரூபன்ஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.