தமிழ்ப்பெண்ணுக்கும் அவுஸ்திரேலிய பிரபலத்துக்கும் திருமணம்! தமிழ் பாரம்பரிய பத்திரிக்கை கசிந்ததையடுத்து ஏற்பட்டுள்ள பிரச்சனை


அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமண பத்திரிக்கை இணையத்தில் கசிந்தது அவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்ரவுண்டராக அவுஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் ஆடிய மேக்ஸ்வெல்லை அந்த அணியே மீண்டும் தக்கவைத்துள்ளது.

மேக்ஸ்வெல்லின் நிகர சொத்து மதிப்பு ரூ 218 கோடி (இலங்கை மதிப்பில்) என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேக்ஸ்வெல் அவுஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
வரும் 27ஆம் திகதி மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமணம் நடைபெறவுள்ளது.
இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

திருமண பத்திரிகை பாரம்பரிய முறைப்படி மஞ்சள் நிற பத்திரிக்கையில் தமிழில் அச்சிடப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கசிந்து மிகப்பெரிய அளவில் வைரலானது.

இது மேக்ஸ்வெல்லுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் இது தற்போது பெரும் பேச்சுப்பொருளாக அமறியுள்ளது.
இதற்கு காரணம் திருமண அழைப்பிதழ் இணையத்தில் கசிந்தது தான்.
அது உகந்ததாக இல்லை.

திருமணத்திற்கு கூடுதல் பாதுகாப்பை ஏற்பாடு செய்து வருகிறோம்.
துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இருக்கும் உறவினர்கள் கொஞ்சம் உற்சாகமாகி, சில நண்பர்களுக்கு அழைப்பிதழை காட்ட முடிவு செய்தனர்.

அது அப்படியே பரவிவிட்டது. அனைவரும் இதை சமூகவலைதளத்தில் பகிர்கின்றனர். இது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது என கூறியுள்ளார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.