பீர் குடிப்பதால் இப்படியொரு ஆபத்தா?- ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் பிரபல ஊட்டச்சத்தியல் இதழில் அண்மையில் ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியாகி ஒட்டுமொத்த உலகையே கலக்கி வருகிறது. உலகத்தையே கலக்கும் அளவுக்கு அதில் எந்த விஷயம் என்கிறீர்களா?

கடந்த இரண்டு வருஷத்துக்கு மேலாக இந்த உலகையே கதிகலங்க செய்து கொண்டிருக்கும் கொரோனாவையும், மனிதனை எளிதில் அடிமையாக்கும் மதுலையும் இணைத்து அந்த கட்டுரை பேசியுள்ளதுதான் இன்று டாக் ஆஃப் தி வேர்ல்டு.

அதில், வாரத்துக்கு 1 -4 கோப்பை சிவப்பு
ஒயின்
பருகுவது,
கொரோனா தொற்று
ஏற்படும் அபாயத்தை 10 சதவீதம் அளவுக்கும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பைகள் இந்த ஒயினை அருந்துவதால் கொரோனா 17 சதவீதம் அளவுக்கும் மனிதனுக்கு கொரோனா அபாயம் குறைகிறதாம். இந்த விஷயத்தில் வெள்ளை ஒயின், சாம்பைனைவிட சிவப்பு ஒயின் நல்ல பலனை தருகிறதாம்.

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு.. 90 நிமிடம் உடற்பயிற்சி செய்தால்.. ரொம்ப நல்லதாம்!

அதேசமயம்,
பீர்
அருந்துவது கொரோனா தொற்று அபாயத்தை 700 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறது.

இப்படி ஒயின், பீர் குறித்த ஆய்வு முடிவுகள் ஒருபுறம் இருக்க, சரக்கு அடிக்குறவங்களை கொரோனா ஒண்ணும் செய்யாது என்று
மதுபிரியர்கள்
வாய் சவடால் பேசுவதுண்டு. அவர்களை ஒருசேர உற்சாகம் மற்றும் எச்சரி்க்கை விதத்தில் இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன.

நேரு உருவாக்கிய இந்தியாவின் இன்றைய நிலை.. சிங்கப்பூர் பிரதமர் பரபரப்பு பேச்சு

ஆய்வு முடிவு எப்படி இருந்தாலும், வழக்கம் போல் முககவசம் அணிவது, சமூக இடைவெளியே கடைபிடிப்பது, தடுப்பூசி போட்டு கொள்வது ஆகிய வழிமுறைகள்தான் கொரோனாவில் இருந்து மனிதனை காப்பாற்றும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.