மோடி அரசுக்கு எதிராக வியூகம் அமைக்கும் சந்திரசேகரராவ்: உத்தவ்தாக்கரே, மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்…

ஐதராபாத்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  வியூகம் அமைத்து வருகிறார். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக அரசை ஓரம் கட்டும் முயற்சியாக,  எதிர்க்கட்சி தலைவர்களை முதலவர்  சந்திரசேகரராவ் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகா் ராவ் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக அரசு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாக குற்றம் சாட்டி வருவதுடன், விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கம், வேலையின்மை போன்றை மோடி அரசின் திறமையின்மை என்று விமர்சித்து வருகிறார்.

பெட்ரோல், டீசல் மீதனான  கலால் வரியை மத்தியஅரசு குறைத்த பிறகும் மாநில அரசுகள் வாட் வரியை குறைக்கவில்லை என்று பாஜகவினர் கூறினர். அப்போது,  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை கூட்டியது நாங்கள் அல்ல, வரியை ஏற்றிய முட்டாள் தான் அதைக் குறைக்கவும் வேண்டும் என்று கடுமையாக சாடியதுடன், 2022ம் ஆண்டு பிப்ரவரி 1ந்தேதி  பாஜக அரசு தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தபோது,  பாஜகவை வங்கா விரிகுடா கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். மேலும்,  பா.ஜ.க என்ன செய்தாலும் அதை அமைதியாக உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக வியூகம் வகுத்து வரும் சந்திரசேர ராவ் வரும் 20-ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேயை மும்பையில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனை கட்சித் தலைவரான உத்தவ் தாக்கரே, சந்திரசேகா் ராவை புதன்கிழமை தொலைபேசியில் அழைத்து, மும்பைக்கு வருமாறு அழைப்பு விடுத்தாா். மேலும், பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரான சந்திரசேகா் ராவின் போராட்டத்துக்கு உத்தவ் தாக்கரே முழு ஆதரவு தெரிவித்தாா். இந்த அழைப்பை ஏற்று வரும் 20-ஆம் தேதி தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் மும்பை செல்கிறாா். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உத்தவ் தாக்கரே உடனான சந்திப்பின்போது முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியையும் சந்தித்து பேச சந்திரசேகா் ராவ் முடிவு செய்துள்ளாா்

ஏற்கனவே சந்திரசேகரராவ் முயற்சிக்கு முன்னாள் பிரதமரும், மதச்சாா்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. தேவே கெளடா ஆதரவு தெரிவித்துள்ளார்.

சந்திரசேகரராவ் கடந்த 2018ம் ஆண்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக 3வது அமைக்கப்போவதாக கூறி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்ச தலைவர் ஹேமந்த் சோரன் போன்றோரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

பாஜகவை வங்கா விரிகுடா கடலில் தூக்கி எறிய வேண்டும்! தெலுங்கானா முதல்வர் ஆவேசம்…

வரியை உயர்த்திய முட்டாள்கள் வரியை குறைக்கட்டும்! மோடியை விளாசிய சந்திரசேகர்ராவ்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.