ரூ.740 கோடிக்கு மேல் சம்பளமா.. ஆப்பிள் CEO-க்கு எதிராக போர்கொடியா..?

அமெரிக்காவின் டெக் ஜாம்பவான் ஆன ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக்கின் சம்பளம் + போனஸ் என அனைத்து சலுகைகளும் சேர்த்து இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 740 கோடி ரூபாய்க்கும் மேல்.

கடந்த 2011ம் ஆண்டில் பதவியேற்ற டிம் குக், 2025 வரையில் இந்த பதவியில் நீட்டிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..!

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் பங்கு மதிப்பிற்கு ஏற்ப இவரின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது.

எவ்வளவு சம்பளம்?

எவ்வளவு சம்பளம்?

டிம் குக்கின் சம்பளம் 3 மில்லியன் டாலராகும். சம்பளம் குறைவாக இருந்தாலும் அவருக்கு கிடைக்கும் சலுகைகள் என சேர்த்து பார்க்கும்போது கிட்டதட்ட 99 மில்லியன் டாலராகும். 2021ம் ஆண்டில் டிம் குக்கின் சம்பளம் 3 மில்லியன் டாலராகும். இதோடு 82.3 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளும் அவார்டாக கிடைத்துள்ளது.

மொத்த சம்பளம் +அலவன்ஸ்

மொத்த சம்பளம் +அலவன்ஸ்

இவற்றோடு ஈக்விட்டி அல்லாத ஊக்கத் தொகையாக 12 மில்லியன் டாலர், அது போக ஏர் அலவன்ஸ் உள்ளிட்ட மற்ற சலுகைகளுக்கு ஊக்கத் தொகையாக 1.39 மில்லியன் டாலர் ஊக்கத் தொகையும் கிடைத்துள்ளது. ஆக மொத்தம் அவரின் மொத்த சம்பளம் 2021ல் 98.7 மில்லியன் டாலராகும். இது முந்தைய ஆண்டில் வெறும் 14.8 மில்லியன் டாலராகவும் இருந்தது. இதன் இன்றைய மதிப்பு 740 கோடி ரூபாய்க்கும் மேல்.

முந்தைய நிலவரம் என்ன?
 

முந்தைய நிலவரம் என்ன?

கடந்த 2019, 2020, 2021ல் தொடர்ந்து அவரது சம்பளம் 3 மில்லியன் டாலராகத் தான் உள்ளது. அவருக்கு கிடைத்த ஈக்விட்டி பங்கு 2021ல் 82,347,835 பங்குகளாகும். இது முந்தைய ஆண்டுகளில் என தரவுகள் ஏதும் சரியாக கிடைக்கவில்லை. இதே ஈக்விட்டி அல்லாத ஊக்கத் தொகை 2021ல் 12 மில்லியன் ஆகும். இது முந்தைய ஆண்டுகளில் 10 மில்லியன், 7 மில்லியனுக்கும் மேலாக இருந்தது. அதேபோல மற்ற ஊக்கத் தொகைகளும் 2019 மற்றும் 2020வுடன் ஒப்பிடும்போது 2021ல் அதிகமாகும்.

எதிராக வாக்களியுங்கள்

எதிராக வாக்களியுங்கள்

டிம் குக்கிற்கு கிடைத்த பங்கு ஊக்கத்தொகையின் படி, ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் சராசரி சம்பளத்தினை விட 1447 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது..

இதற்கிடையில் தான் ஆலோசனை நிறுவனமான இன்ஸ்டிடியூஷனல் ஷேர் ஹோல்டர் (ISS) , ஆப்பிளின் முதலீட்டாளர்களை டிம் குக்கின் சம்பளத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இது குறித்த முழுமையான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Apple shareholders urged to vote against CEO’s pay bonus

Apple shareholders urged to vote against CEO’s pay bonus/ரூ.740 கோடிக்கு மேல் சம்பளமா.. ஆப்பிள் CEO-க்கு எதிராக போர்கொடியா..?

Story first published: Thursday, February 17, 2022, 14:59 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.