`வலிமை' கார்த்திகேயா Exclusive: "அஜித் சார் என் பைக்கை செக் பண்ணிட்டுத்தான் ஷூட்டிங்குக்கு விட்டார்!"

“ஒரு தெலுங்குப் படம் பண்ணிட்டு இருந்த நேரத்துல ‘வலிமை’ படத்துக்காக என்னோட மேனேஜருக்கு ஒரு மெசேஜ் வந்துச்சு. என்னால நம்ப முடியல. உண்மையா இல்ல பொய்யானு டவுட் இருந்தது. வில்லன் கேரக்டருக்கு நடிக்கக் கேட்டு மெசேஜ் வந்திருந்தது. அப்புறம், உண்மைன்னு தெரிஞ்சதுக்குப் பிறகு ரொம்ப சந்தோஷமாகிட்டேன். ‘வலிமை’க்கு முன்னாடி வரைக்கும் தமிழ்ல படம் பண்ணதில்லை. முதல் படமே அஜித் சார்கூட வந்தப்போ சந்தோஷப்பட்டேன்.

ஹெச்.வினோத் சார் படங்களெல்லாம் பார்த்திருக்கேன். அப்புறம், என்னோட ரோல் பற்றிக் கேட்டேன். வினோத் சார் அசிஸ்டென்ட் டைரக்டர் ஹைதராபாத்துல வந்து கதை சொன்னார். என்னோட ரோல் பற்றித் தெரிஞ்சவுடனே ‘ஓகே’ சொல்லிட்டேன். அப்பறம்தான் வினோத் சாரை சென்னையில மீட் பண்ணேன்” என உற்சாகமாகப் பேசத் தொடங்கிறார் ‘வலிமை’ படத்தின் வில்லன் கார்த்திகேயா. ‘வலிமை’ வாய்ப்பு குறித்து பூரிப்புடன் பேசியவர், பின்னர் நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.

கார்த்திகேயா

தமிழ்ல உங்கள் முதல் படம். எப்படி இருந்துச்சு?

“முதல் படமே அஜித் சார் கூட வேலை பார்க்க போறோம்னு தெரிஞ்சதுல இருந்து தூக்கம் வரல. தமிழில் பெரிய ஸ்டார் அஜித் சார். அவர்கிட்ட எப்படிப் பேசணும்னு ப்ராக்டிஸ் பண்ணுனேன். சொல்லப்போனா, எனக்குத் தமிழ் சுத்தமா பேச வரல. அதனால அஜித் சார் எப்பவும் இங்கிலீஷ்ல என்கிட்ட பேசுவார். இப்போ தமிழ்ப் படத்துல நடிச்சதுக்கு அப்புறம் கொஞ்சம் தமிழ் பேசுறேன். டயலாக்ஸ் சீட் வாங்கி படிச்சுப் பார்ப்பேன். அர்த்தம் புரிஞ்சிக்கிட்டு மனப்பாடம் பண்ணிப் பேச ஆரம்பிச்சேன்.”

அஜித்துடனான முதல் சந்திப்பு, முதல் நாள் ஷூட்டிங் அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்.

“அஜித்கூட ஃபர்ஸ்ட் ஷார்ட் நடிக்கிறதுக்கு முன்னாடியே, ‘கார்த்திகேயாவை மீட் பண்ணணும்னு’கேட்டு என்னை வந்து கேரவன்ல பார்த்தார். அவரை மீட் பண்ணதும்தான் அவர் எவ்வளவு ஸ்வீட்னு தெரிஞ்சது. என்னைக் கட்டிபிடிச்சு வெல்கம் பண்ணினார். அப்போதான் எனக்குள்ள பெரிய நம்பிக்கை வந்தது. எப்போவும், என்னோட பிசிகல் ஹெல்த் மற்றும் டயட் பற்றிக் கேட்டுக்கிட்டே இருப்பார். எனக்குள்ள இருந்த பயம் எல்லாத்தையும் போக்கினார். ரொம்ப கம்ஃபோர்ட் ஜோன்ல வெச்சிக்கிட்டார். என்னோட ‘ஆர்.எக்ஸ் 100’ ட்ரெய்லர் பார்த்திருந்தார். நிறைய போட்டோஷூட் பார்த்திருந்தார். ஃபர்ஸ்ட் டே ஷூட்டிங் முடிஞ்சு ஹோட்டல் போறப்போ, ‘இவர் அஜித்தானா’னு டவுட் வர வெச்சிட்டார். அந்தளவுக்கு டவுன் டு எர்த் பெர்ஷன் அஜித்.”

வலிமை அஜித்

படத்துல நிறைய பைக் சேஸிங் இருக்கு. அதுக்கு எப்படித் தயாரானீங்க?

“அஜித் சாருக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. இவர்கூட நடிக்கிறப்போ சரியா இருக்கணும்னு ஒரு மெனக்கெடல் இருந்துச்சு. ‘வலிமை’ நடிக்க ஆரம்பிச்ச சில நாள்களிலேயே லாக்டௌன் வந்திருச்சு. இந்த நேரத்துல அஜித் சார்கிட்ட இருந்து அடிக்கடி போன் வரும். எந்த மாதிரியான வொர்க் அவுட் பண்ணிட்டு இருக்கேன்னு கேட்பார். புரொட்டீன் எவ்வளவு எடுத்துக்குறேன்னு செக் பண்ணுவார். என்னைப் பற்றி விசாரிப்பார். பிக் ப்ரதர் மாதிரியே ட்ரீட் பண்ணுவார். என்கிட்ட மட்டுமில்ல எல்லார்கிட்டயும் இப்படித்தான் இருக்கார். எனக்கும், படத்துல பைக் ரேஸிங் இருக்கு. என்னோட லெவல் ஆர்.எக்ஸ்.100-ன்னா அஜித் சார் லெவல் வேறயா இருக்கும். பைக் ரேஸிங் ஷாட் எடுக்குறதுக்கு முன்னாடி என்னோட பைக் எடுத்து செக் பண்ணினார். இன்ஜின், பிரேக் எல்லாம் சரியா இருக்கான்னு ஓட்டிப் பார்த்தார். படத்துல பைக் ரேஸிங் பண்ணியிருக்கேன். ஆனா, அஜித் சார் லெவலுக்குப் பண்ணல.”

அஜித் சார் ஷூட்டிங்னாலே பிரியாணி ட்ரீட் ரொம்ப பிரபலம். உங்களுக்கு என்ன ட்ரீட் கிடைச்சது?

“எனக்காக ஷூட்டிங் ஸ்பாட்ல சூப் செஞ்சு கொடுப்பார். எந்த மாதிரியான சூப் வேணும்னு கேட்டுட்டு செய்வார். படத்தோட கடைசி ஃபைட் சீன் முடிச்சவுடனே ஆந்திரா ஸ்டைல் பிரியாணி பண்ணிக் கொடுத்தார்.”

வலிமை படத்தில்…

‘வலிமை’ ஆக்‌ஷன் சீக்வென்ஸ்… நாங்க என்ன எதிர்பார்க்கலாம்?

“‘வலிமை’ பொருத்தவரைக்கும் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் ரொம்ப அதிகம். ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கும். ஒவ்வொரு ஆக்‌ஷன் சீக்வென்ஸ் ஸ்டோரி கூட சேர்ந்து இருக்கும். திலீப் சுப்பராயன் ஹாலிவுட் ரேஞ்சுல பண்ணியிருக்கார். அவரோட படங்கள்ல பெஸ்ட் ஆக்‌ஷன் படமா ‘வலிமை’ இருக்கும்.”

கார்த்திகேயா – ‘வலிமை’ படத்தில்…

உலக வைரலான ‘வலிமை அப்டேட்’ டிரெண்ட்… இந்தளவு எதிர்பார்ப்பை எதிர்பார்த்தீங்களா?

“‘வலிமை’ படத்துல நடிக்குறேன்னு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததுல இருந்தே அப்டேட் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. எந்தவொரு ட்வீட் போட்டாலும், ‘வலிமை அப்டேட்’ கேட்டுதான் கமென்ட்ஸ் வரும். இன்னும் படம் ரிலீஸாகல. இருந்தும், எல்லாரும் படத்துக்காக இவ்வளவு வெயிட் பண்றது சந்தோஷமா இருக்கு” என்று முடித்தார் கார்த்திகேயா.  

இன்னும் பல கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கும் கார்த்திகேயாவின் ‘வலிமை’ ஸ்பெஷல் பேட்டி, விரைவில் சினிமா விகடன் யூடியூப் பக்கத்தில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.