13 வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்த அற்புத சந்திப்பு: ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளைராஜா. அவரின் சகோதரர் இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன். இவர் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் உள்பட பல படங்களுக்கு
இளையராஜா
இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவை,
கங்கை அமரன்
நேரில் சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசைஞானி இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரன். இவர் இசையமைப்பாளர், பாடலாசிரியர் , திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமைக்கொண்டவர். இவர் கோழி கூவுது, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் கரகாட்டக்காரன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

கங்கைஅமரனுக்கும் இளையராஜாவுக்கும் சின்னராமசாமி பெரியராமசாமி பட தயாரிப்பின் போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் பேசிக்கொள்வது இல்லை என்றும், எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் சந்தித்துக் கொண்டதும் இல்லை என்றும் தகவல்கள் வெளியானது.

HBD Sivakarthikeyan: சின்னத்திரை டூ வெள்ளித்திரை.. உச்சம் தொட்ட ‘நம்ம வீட்டு பிள்ளை’..!

இந்நிலையில், நேற்றைய தினம் கங்கை அமரன் தனது அண்ணன் இளையராஜாவை வீட்டில் சந்தித்து மனம் விட்டு பேசி உள்ளார். இந்த சந்திப்பு குறித்து கங்கை அமரம் பேசும் போது, “அண்ணன் அழைப்பதாக போனில் சொன்னார்கள். நான் இவ்வளவு காலம் அதற்குத்தான் காத்திருந்தேன். உடனே போய் சந்தித்தேன். ஒன்றரை மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தேன். எந்தச் சண்டை சச்சரவுகளும் இல்லாமல் அருமையாகப் பேசிக்கொண்டு இருந்தார்.

இனிமேல் சந்தோஷமாக இணைந்திருப்போம். 13 வருடங்களாகப் பேசாமல் இருந்தது பெரும் துயரம். இனிமேல் அது போல் நேராது. எனக்கு இப்போது சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சியாக வீட்டுக்குப் போகிறேன்” என சந்தோஷம் பொங்க தெரிவித்துள்ளார் கங்கை அமரன். இவர்கள் சந்தித்து கொண்ட புகைப்படங்களை
வெங்கட் பிரபு
, பிரேம்ஜி உள்ளிட்டோர் பகிர்ந்து தங்களின் மன மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Beast Shooting-யை நேரில் பார்த்தேன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.