Metaverse'ல் நிலம் வாங்கி தியேட்டர் கட்டிய தயாரிப்பாளர்!

காலத்தின் வேகத்தை விட தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு ஒரு சான்று தான், இல்லாத ஒரு இடத்தில் நம்மை இருப்பதாக மெய்ப்பிக்கும்
மெட்டாவெர்ஸ்
தொழில்நுட்பம். விளையாட்டு, திருமணம், நிகழ்வுகள் என அனைத்தையும் சிலர் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பம் மூலம் நடத்தி வரும் செய்திகளும் அண்மையில் டிரெண்டாகி வருகிறது. இச்சூழலில், சினிமா துறையில் பிரபலமான
Pooja Entertainment
தயாரிப்பு நிறுவனம், புதிய அறிவிப்பை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டெயின்மெண்ட் சமீபத்தில் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் மெய்நிகர் நிலத்தை (
Virtual Land
) வாங்கி உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பு தான் இந்த ஷாக்கிற்கு காரணம். மெட்டாவெர்ஸ் என்பது மெய்நிகர் தொழிநுட்பத்தால் இயங்கக்கூடிய விர்சுவல் உலகமாகும். மேகக் கணினி முறையில் உருவாக்கப்பட்ட சூழலில் ஒருவருக்கொருவர் இதில் தொடர்பு கொள்ளலாம். நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம்.

Metaverse Rape: மெட்டாவெர்ஸ் உலகில் என்னை சீரழித்துவிட்டனர் – பெண் பகீர் புகார்!

மெய்நிகர் உலகில் திரையரங்கம்

இந்நிலையில், இவர்கள் புதிதாக வாங்கி இருக்கும் மெய்நிகர் இடத்திற்கு
பூஜாவெர்ஸ்
(
PoojaVerse
) என்று பெயரிட்டுள்ளனர். பார்வையாளர்களுக்கு கூடுதல் தரமான படைப்புகளை அதிவேகமாகமாகவும், அதே நேரத்தில் புதுமையான அனுபவங்களுடன் கண்டண்டுகளை வழங்கும் நோக்கிலே இந்த நிலம் வாங்கப்பட்டுள்ளதாக பூஜா எண்டர்டெயின்மெண்ட் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

“இது எங்களின் கனவு திட்டமாகும். இதில் நாங்கள் மெய்நிகர் திரையரங்கத்தை உருவாக்குவோம். 1998ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த
BadeMiyan ChoteMiyan
இந்தி மொழி திரைப்படத்தை இந்தி உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் மொழிகளில் இந்த மெய்நிகர் திரையரங்கத்திலே வெளியிடுவோம். 2023இல் வரும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு அன்று, இந்த திரைப்படத்தை பூஜாவெர்ஸ்’ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று பூஜா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியான தீப்ஷிகா தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பம் என்றால் என்ன?

நேரில் கண்டிராத ஒருவரை கூட சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களாக்கி கொள்ள முடிகிறது. இந்த இணைய உலகின் பரிணாம வளர்ச்சி தான் மெட்டாவெர்ஸ். META UNIVERSE என்ற வார்த்தை மருவி தான் METAVERSE உருவானது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் உலகு என்பது தான் இதன் பொருள்.

தற்போதுள்ள Roblox நிறுவனத்தின் போர்ட்நைட் (Fortnite) ஆன்லைன் வீடியோ கேம்களும் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. நாம் இருக்கும் இடத்தை கற்பனை உலகிற்கு கொண்டு செல்வது தான் மெட்டாவெர்ஸ் வேலை.
மெய்நிகர் தொழில்நுட்பம்
(Virtual Reality), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆகிய தொழில்நுட்பங்கள் இணைந்து மெட்டாவெர்ஸ் இயங்குகிறது.

டிஜிட்டல் கல்யாணம்.. வைரலாகும் தமிழக ஜோடி! இது புது டிரெண்ட்!

தற்போது ஆன்லைன் விளையாட்டுகளில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் இனி,மக்களை தங்களுக்கு பிடித்தமான தோற்றம் கொண்ட அவதார்களை உருவாக்கி மெய்நிகர் உலகில் வாழச் செய்ய போகிறது இந்த தொழில்நுட்பம் சாத்தியப்படும் போது மெய்நிகர் உலகில் அந்த நண்பர்களோடு நாம் ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.