சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. இன்று சற்றே ஆறுதல்.. ஆபரண தங்கம் நிலவரம் என்ன?

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.

இதற்கிடையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தங்கத்திற்கான தேவையானது, இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சர்வதேச நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், 5ல் 2 பங்கு தங்கத்தின் தேவையானது பாதுகாப்பு ரீதியாக முதலீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா+நேட்டோ போட்ட மிகப்பெரிய வெடி.. தங்கம் விலை மீண்டும் உச்சம்..!

 முதலீடுகள் வெளியேறலாம்

முதலீடுகள் வெளியேறலாம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டி விகிதமானது பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்து வருகின்றது. இது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. அப்படி அதிகரிக்கும் பட்சத்தில், உங்களது காயின், பார்கள், பேப்பர் தங்கம் என பலவற்றிற்கும் இருக்கும் வட்டியில்லா முதலீடுகள் வெளியேறலாம். ஆக அரசு விதிமுறைகளை கடுமையாக்கும்போது அது தங்கத்தில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

 ஏற்ற இறக்கம் இருக்கலாம்

ஏற்ற இறக்கம் இருக்கலாம்

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது பெரியளவில் சரிவினை காணாமல் சைடுவேயாக இருந்து வருகின்றது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையும் பூதாகரமாக கிளம்பி வருகின்றது. இதுவரையில் ஒரு சுமூக நிலை வரும் வரும் வரையில், தங்கத்தில் இந்த ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தங்கம் விற்பனை
 

தங்கம் விற்பனை

கடந்த ஆண்டில் கொரோனாவின் மத்தியில் தங்கத்தினை 611 மெட்ரிக் டன்னினை இந்திய தங்க விற்பனையாளர் வாங்கியுள்ளனர். இதே அதிகளவில் பயன்படுத்தும் சீனாவின் தேவையானது 63% அதிகரித்து, 675 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இது நடப்பு ஆண்டில் இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கை

சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கை

சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கையினால் சீனாவில் விரைவில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவது தாமதமாகலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சீனாவின் தேவை குறையலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு முதலீட்டு ரீதியாக பாதுகாப்பாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வெள்ளி நிலவரம்

வெள்ளி நிலவரம்

தொடர்ந்து தொழிற்துறையானது வளர்ச்சி கண்டு வரும் நிலையில், வெள்ளியின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டு ரீதியாகவும் தங்கத்திற்கு அடுத்தப்படியாக உள்ள ஒரு வெள்ளை தங்கமாகவும் பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 7.75 டாலர்கள் குறைந்து, 1894.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கொண்டு நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

வெள்ளி விலையும் சற்று அதிகரிதே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 23.925 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. ஆக வெள்ளி விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. வெள்ளி விலையானது 24.060 டாலரை உடைத்தால் மேற்கொண்டு நன்றாக ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து, 50,162 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் தற்போது தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு சற்று அதிகரித்து, 64,011 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 4,742 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து, 37,936 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து, 5,173 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 41,384 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,730 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையை போல, ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 68.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 685 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 68,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 18th February 2022: gold prices today above Rs.50,100

gold price on 18th February 2022: gold prices today above Rs.50,100/சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. இன்று சற்றே ஆறுதல்.. ஆபரண தங்கம் நிலவரம் என்ன?

Story first published: Friday, February 18, 2022, 12:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.