சொகுசுக் கப்பலின் 10ஆவது தளத்திலிருந்து கடலில் குதித்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்: வெளியாகியுள்ள வீடியோ


மெகிச்கோ வளைகுடாவில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசுக்கப்பல் ஒன்றிலிருந்து கடலில் குதித்த பெண் ஒருவர் மாயமான சம்பவம் தொடர்பில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Carnival Valor என்னும் சொகுசுக்கப்பலில் 2,980 பயணிகளும், 1,180 பணியாளர்களும் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை New Orleans என்ற இடத்திலிருந்து புறப்பட்ட அந்தக் கப்பல் மெக்சிகோ நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது. அந்தக் கப்பல் புதன்கிழமையன்று மெக்சிகோ வளைகுடா பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்தக் கப்பலில் பயணித்த ஒரு 32 வயது பெண் சுடுதண்ணீர் தொட்டியில் குளித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அவருக்கும் கப்பலின் பாதுகாவலர்களுக்கும் ஏதோ வாய்த்தகராறு ஏற்பட, அவரை மூன்று பாதுகாவலர்கள் அங்கிருந்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.

அதை விரும்பாத அந்தப் பெண், அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, கப்பலின் பத்தாவது தளத்திலிருந்து கடலில் குதித்திருக்கிறார்.

ஆனால், அவர் நேரடியாக கடலில் விழாமல், கப்பலின் பக்கவாட்டில் மோதி, முகம் தண்ணீரில் அடிக்க விழுந்ததாக அந்தக் கப்பலில் பயணித்த சக பயணிகள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.

தலையில் அடிபட்டதாலோ என்னவோ, வலிப்பு வந்ததுபோல் துடித்த அந்தப் பெண், இரத்தவெள்ளத்தின் நடுவில் தண்ணிரில் மூழ்கியிருக்கிறார்.

மூழ்கினவர் மூழ்கினவர்தான். புதனன்று தண்ணீரீல் விழுந்தவரை கடலோரக் காவல்படையினர் வியாழக்கிழமை வரை தேடியும் அவர் கிடைக்காததால், தேடும் பணி நிறுத்தப்பட்டது.

அந்தப் பெண்ணின் கணவர் அவருடன் அந்தக் கப்பலில் பயணித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களது பெயர், மற்றும் அவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மரண வீட்டுக்கு வந்தவர்கள் சிறிது நேரம் இறந்தவருக்காக அழுதுவிட்டு, பிறகு சொந்தக் கதையை கவனிக்கச் சென்றுவிடுவது போல, அந்தப் பெண் தண்ணீரில் விழுந்ததும் மற்ற பயணிகள் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் அந்த சொகுசுக்கப்பல் வழக்கம் போல தன் பயணத்தை தொடர ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.
 Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.