ரஷ்யா – உக்ரைன் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் : அமெரிக்கா எச்சரிக்கை <!– ரஷ்யா – உக்ரைன் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் : அமெரிக்கா… –>

க்ரைன் எல்லைகளில் இருந்து ரஷ்யா படைகளை திரும்பப் பெற்று வருவதாக கூறி வரும் நிலையில், உக்ரைனில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா அடுத்த சில நாட்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். 

சோவியத் யூனியன் உடைந்த போது தனிநாடாக உருவெடுத்த உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருவதால், பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதை அடுத்து, இருநாடுகளுக்கு இடையே மோதல் அதிகரித்தது. இதற்கிடையே, ராணுவ கூட்டமைப்பான நேட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதையும் விரும்பாத ரஷ்யா, அந்நாட்டின் எல்லைகளில் படைகளை குவித்தது.

சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், அதிநவீன பீரங்கிகள், போர் வாகனங்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா நிலைநிறுத்தியிருந்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே கடுமையான போர்பதற்றம் உருவானது. இந்த போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தன.

பல்வேறு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்க அதிபரின் எச்சரிக்கை என பலதரப்பு செயல்பாடுகளுக்கு பின்னர் உக்ரைன் எல்லையில் இருக்கும் தமது நாட்டு படைகள் திரும்பப் பெறப்படுவதாக ரஷ்யா கூறியது.

இந்த நிலையில் தான், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எல்லையோர மாகாணமான டான்பஸில் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தில் திடீரென தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி மீது நடைபெற்ற இந்த தாக்குதலில் மழலையர் பள்ளியில் பணியாற்றி வந்த 3 பேர் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது. ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இது குறித்து கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் எல்லையில் இருந்து படைகள் எதையும் திரும்பப் பெறவில்லை, அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் எனவும் கூறியிருக்கிறார்.

மேலும், ரஷ்யா படைகளை திரும்ப பெறுவதாக கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை, அதில் இன்னும் சந்தேகம் நீடிக்கிறது எனவும் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். மேலும் ரஷ்ய படையெடுப்பு பற்றிய அச்சம் அதிகரித்து வருவதால், அந்நாட்டு அதிபர் புதினை நேரில் அழைத்து பேசும் திட்டம் தனக்கு இல்லை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.