வலிமை' படத்திற்கு பிரமோஷன் செய்யும் ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் அடுத்த வாரம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கான அனைத்து பிரமோஷன் பணிகளும் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இருபது வினாடி வீடியோ புரோமோ ஒன்று வெளியிடப்பட்டது. அதை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டிருந்தார். அவரது மகளான பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். 'வலிமை' படம் தொடர்பாக தொடர்ந்து பதிவுகளைத் தந்து வருகிறார் ஜான்வி. அப்பா தயாரிக்கும் படம் என்பதால் மட்டுமல்ல, படம் ஹிந்தியிலும் வெளிவருவதும் ஒரு காரணமாக இருக்கும். ஏனென்றால், ஜான்வியை இன்ஸ்டாவில் 15 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள்.

மேலும், 'வலிமை' படத்தின் நாயகன் அஜித்குமார், இயக்குனர் வினோத் உள்ளிட்டவர்கள் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை. படத்தின் கதாநாயகி ஹுமா குரேஷியை எவ்வளவு பேர் ஞாபகம் வைத்திருப்பார்கள் என்பதும் சந்தேகம்தான். ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் அவரது காதலியாக நடித்தவர் தான் ஹுமா குரேஷி. படத்தின் வில்லனான தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்தப் படம் மூலம்தான் தமிழில் அறிமுகமாகிறார்.

படத்தின் இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜாவும் கடந்த இரண்டு வார காலமாக 'வலிமை' பற்றி எந்த ஒரு பதிவையும் டுவிட்டர் தளத்தில் இடவில்லை. இவருக்கும், இயக்குனர் வினோத்துக்கும் உரசல் என்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் பின்னணி இசை அமைத்துள்ளார் என்றும் ஒரு தகவல். ஆனால், இதுவரையிலும் அது உறுதி செய்யப்படவில்லை.

இருந்தாலும் இந்தப் படத்தில் சம்பந்தப்படாத பல சினிமா பிரபலங்கள் 'வலிமை' படத்தை முதல் நாளில் பார்க்க தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.