இன்று 108 சங்காபிேஷகம்| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி, சாரத்தில் தங்கியுள்ள தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு இன்று 108 சங்காபிேஷகம் நடக்கிறது.புதுச்சேரி, வைத்திக்குப்பம் கடற்கரையில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில், பங்கேற்ற, தீவனுார் பொய்யாமொழி விநாயகர், சாரம் சித்தி புத்தி விஜயகணபதி கோவிலில் தங்கியுள்ளார்.தீவனுார் விநாயகருக்கு, சாரம் மாசிமக வரவேற்பு குழு சார்பில், இன்று காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடக்கிறது. தொடர்ந்து 108 சங்காபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.இரவு மின் அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.