வாஷிங்டன்,
அமெரிக்காவின் ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் 2022 இவி லீக் பெண்கள் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில், நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கான இந்த நீச்சல் போட்டியில் மூன்றாம் பாலினத்தவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்றாம் பாலினத்தவர்களான (திருநங்கைகள்) ஐசக் ஹிங்க் மற்றும் லியா தாமஸ் ஆகிய இருவரும் பெண்களுக்கான இந்த நீச்சல் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
ஆணாக பிறந்த லியா தாமஸ் 2019-ம் ஆண்டு பெண்ணாக மாறுவதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதேபோல், பெண்ணாக பிறந்த ஐசக் ஹிங்க் ஆணாக மாறுவதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டுள்ளார்.
தற்போது திருநங்கைகளான இருவரும் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. அவர்கள் நீச்சலில் பங்கேற்ற வீராங்கனைகளுடன் போட்டியிட்டனர்.
நீச்சல் போட்டிகளின் போது தாங்கள் போட்டியிடும் பிரிவுகளில் சக வீராங்கனைகளை விட அதிக புள்ளிகள் பெற்று திருநங்கைகளான ஐசக் ஹிங்க் மற்றும் லியா தாமஸ் முன்னிலையில் உள்ளனர். பெண்களுக்கான 500 யாட் பிரிஸ்டைல் போட்டியில் தாமஸ் முன்னிலை வகித்தார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 4.37.32 நிமிடங்களில் கடந்தார்.
அதேபோல், 50 மீட்டர் பிரிஸ்டைல் போட்டியில் ஐசக் ஹிங்க் நிர்யணிக்கப்பட்ட இலக்கை 21.93 வினாடிகளில் கடந்து முன்னிலை வகித்தார்.
பெண்களுக்கான நீச்சல் போட்டியில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆதிக்கம் செலுத்திய நிகழ்வு தற்போது விவாதப்பொருளாகியுள்ளது.