மதுரையில் ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவர் கைது! திருப்பூர் அதிகாரியும் கைதாவாரா?

மதுரை: மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக முகவர் கிரிராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் திருப்பூரில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணின் முகத்தைக் காண வாக்குச்சாவடி அலுவலரான அரசு அதிகாரி கூறியதும் சர்ச்சையானது. அவர்மீதும் நடவடிக்கை பாயுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மதுரை மேலூர் 8வது வார்டில் இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வந்த நிலையில், அவரது வாக்காளர் அட்டையை சரிபார்க்கும் வகையில் முகத்தை காட்ட அங்கிருந்த பாஜக ஏஜென்ட் கூறியது சர்ச்சையானது. இதையடுத்து, பாஜக முகவர் கிரிராஜன் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், . ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலூரில் நடந்தது என்ன?

மதுரையை அடுத்த மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டுக்கான தேர்தல், அங்குள்ள அல்அமீன் பள்ளியில் நடைபெற்றது. அங்கு வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களை ஹிஜாப்பை அகற்றிவிட்டு வாக்களிக்கும்படியும், அப்போதுதான் வாக்களிப்பவர்களும், வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பவர்களும் ஒரே ஆளா என்பதை உறுதிப்படுத்த முடியும் என வாக்குச்சாவடிக்குள் அமர்ந்திருந்த  பாஜக முகவர் கிரிராஜன் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க இஸ்லாமிய பெண்கள் மறுத்து விட்டதால், சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து  வாக்குச்சாவடி முகவர் கிரினந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

“வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பவர்தானா என்பதைச் சரி பார்க்க முகத்தைக் காட்டாமல் வாக்களிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ஹிஜாபை அகற்றிவிட்டு வாக்களிக்க வேண்டும். இங்கு அராஜகம் நடக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது,” என்று பாஜக முகவர் கிரினந்தன் வாக்குச்சாவடிக்குள் நின்றுகொண்டு ஹிஜாப் அணிந்த பெண்கள் வாக்களிப்பதை மறுத்துப் பேசினார். 

ஆனால் ஹிஜாப் அணிந்தவரை நாங்கள் உறுதி செய்து விட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர். (வாக்குச்சாவடியில் கட்சி முகவர்கள் எதற்கு?)  பாஜக முகவரின் கேள்விக்கு மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஹிஜாப் அணிவது அவருடைய மத உரிமை அதைக் கேள்வி கேட்கக் கூடாது திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள், என்று கூறினார்கள்.இதையடுத்து கிரிராஜன்  வாக்குபதிவு மையத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு வாக்குபதிவு மீண்டும் தொடங்கியது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “இஸ்லாமிய வாக்காளர்கள், ஹிஜாப் அணிந்து வந்ததால் அடையாளம் காண முடியவில்லை,” “வாக்கு மையத்தில் 60 வயதுடைய வாக்காளரின் வாக்கினை 30 வயதுடைய நபர் ஹிஜாப் அணிந்து கொண்டு செலுத்துகின்றனர். இதனால் அடையாளம் காணும் வகையில், ஹிஜாபை அகற்றக் கூறினேன்” என்று தெரிவித்தார்.

ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார்,  “வாக்குப் பதிவுக்கு என்ன ஆடை அணிந்து வர வேண்டும் என்பது அவரவருடைய விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. சம்பந்தப்பட்ட பாஜக பூத் முகவர் வெளியேற்றப்பட்டு, அந்தக் கட்சி சார்பில் வேறு ஒருவர் முகவராக அமர்த்தப்பட்டு ஒள்ளார். இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தவரை எதிர்த்தவர்கள் மீது விசாரித்து ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்,” என்று கூறினார். மேலும், “இந்தியா மதச் சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுடைய மத நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை உள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி, யாரும் எந்த உடையை வேண்டுமானாலும் அணிந்து வந்து வாக்களிக்கலாம்,” என்றார்.

ஆனால், ஹிஜாப் அணியும்போது, முகத்தை மறைத்து விட்டால், வாக்குச்சாவடி அதிகாரிகளும், கட்சி முகவர்களும்  எப்படி வாக்காளரை உறுதி செய்ய முடியும் என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை. உடை ஒரு பிரச்சினையாக இல்லாதபோது, ஒருவரின் முகத்தை வைத்துதானே அடையாளம் காண முடியும். அந்த முகத்தையும் மூடிக்கொண்டால், வாக்காளர் யார் என்பதை எப்படி உறுதி செய்வார்கள் என்பது தேர்தல் ஆணையருக்கே வெளிச்சம்.

திருப்பூரில் நடந்தது என்ன?

இந்த பரபரப்பான சம்பவங்களுக்கு பிறகு, திருப்பூரிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 17வது வார்டு வளையக்காரத் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்களிக்க சென்ற இஸ்லாமிய பெண்ணை, வாக்காளர் அட்டையில் உள்ள படத்துடன் உறுதி செய்யும் வகையில், ஹிஜாப்பினை அகற்றி காட்டுமாறு அங்கிருந்த வாக்குப்பதிவு மைய பெண் அதிகாரி  கூறி உள்ளார்.

ஆனால், அதை ஏற்க மறுத்து. அந்த இஸ்லாமிய பெண்  ஹிஜாப் அகற்றி வாக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறி  அங்கிருந்து வெளியேறி விட்டார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி.

இந்த விஷயத்தில் முகவர்கள் அமைதியாக இருந்ததால், அந்த பெண்ணுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் வாக்குச்சாவடியில் குவிந்து தகராறு செய்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர், அவர்களிடம்  போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

இந்த விகாரத்தில்,  ஹிஜாப் அகற்ற கூறிய பெண் அலுவலர் மீதும் நடவடிக்கை பாயுமா? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.