தமிழகத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது., திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது – எடப்பாடி கே. பழனிசாமி.!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள காரணத்தால், அச்சத்தில் மக்கள் வாக்களிக்க வரவில்லை என்றும், சில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடும் சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவிக்கையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும். 

இங்கு ஜனநாயகம் செத்துவிட்டது. நேற்று ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது.

திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது., ஜனநாயக கடமையான வாக்களிப்பை செலுத்த முடியாது. இன்னும் சொல்லப்போனால், சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவதற்கு காரணம், இந்த சட்ட ஒழுங்கு தான்.

சென்னை மாநகர மக்கள் வாக்களிக்க முடியாமல் குறைந்த அளவில் அளவுதான் வாக்கு பதிவு செய்து உள்ளனர். சென்னை கோவை மாநகராட்சிகளில் ரவுடிகள், குண்டர்கள் சர்வசாதாரணமாக வீதியில் நடமாடிய காரணத்தினால்தான் பொது மக்கள் வாக்களிக்க வரவில்லை

கோவை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகராட்சியில் அதிக இடங்களில் வன்முறை நிகழ்ந்து உள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் இருக்கின்ற பல வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுகளை திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

தோல்வி அடைந்து விடுவார்கள் என்ற பயத்தில் சென்னை மாநகராட்சி உட்பட்ட பல்வேறு இடங்களில் இப்படி திமுக கள்ள ஓட்டுகளை, வாக்குச்சாவடிகள் அத்துமீறிப் புகுந்து பதிவு செய்திருக்கிறார்கள். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

இதுகுறித்து அதிமுகவினர் எவ்வளவு முறை படித்தாலும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சியின் 114 வது வார்டில் (ஒரு காணொளியை செய்தியாளர்கள் முன்பு காட்டுகிறார்) கள்ள ஓட்டு போட முயற்சி செய்கின்றனர். இதனை பலர் தங்களது செல்போனில் பதிவு செய்து உள்ளனர்” என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.