அதிகரிக்கும் பதற்றம்… ரஷ்யா மீது பாயும் நடவடிக்கை! ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


 கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீகரித்த பின்னர், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் புடினின் முடிவை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் Charles Michel கடுமையான வார்த்தைகளில் கண்டித்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உக்ரைனின் Donetsk மற்றும் Luhansk பிராந்தியங்களின் அரசு சாராத பகுதிகளை சுதந்திரமான நாடுகளாக அங்கீகரிக்கும் ரஷ்ய ஜனாதிபதியின் முடிவை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் Charles Michel கடுமையாக கண்டிக்கிறார்கள்.

இந்த நடவடிக்கை சர்வதேச சட்டம் மற்றும் மின்ஸ்க் ஒப்பந்தங்களை அப்பட்டமாக மீறுவதாகும்.

இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளுடன் பதிலடி கொடுக்கும்.

உக்ரைனின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் அதன் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு அசைக்க முடியாத ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்துகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.