சென்னை, பெங்களூருக்கு போட்டியாக வரும் கேரளா.. பினராயி விஜயனின் புதிய 5 வருட திட்டம்..!

சமீபத்தில் இந்தியாவைப் பார்த்து வியந்துபோன ஐக்கிய அரபு நாடுகள், 2031க்குள் 20 யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கத் துபாய் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரள அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது மட்டுமல்லாமல் முக்கியமான இலக்கையும் நிர்ணயம் செய்துள்ளது.

அனில் அம்பானி-யின் மூத்த மருமகள்.. யார் இந்த கிரிஷா ஷா..!

கேரள அரசு

கேரள அரசு

கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் (KSUM) பிரிவு ஏற்பாடு செய்திருந்த மூன்றாவது ‘ஹடில் குளோபல் 2022’ நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், அடுத்த 5 ஆண்டில் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் 15,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 2,00,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க கேரள அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

மேலும் கொச்சியில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான ஸ்டார்ட்அப் ஹப்-ஐ அரசு உருவாக்க உள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருக்கும் காரணத்தால் இதற்குச் சரியான தளம் கேரளாவில் உருவாக்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்ட்அப் முதலீடு
 

ஸ்டார்ட்அப் முதலீடு

2015ஆம் ஆண்டு முதல் கேரளா ஸ்டார்ட்அப் சந்தை சுமார் 3200 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பெற்றுள்ளது. கொச்சியில் டெக்னாலஜி இன்னோவேஷன் சோனில் ஸ்டார்ட்அப் இன்பராஸ்ட்ரக்சர் இருப்பது போல் திருவனந்தபுரத்திலும் அமைக்கப்பட்ட உள்ளதாக இந்த 2 நாள் கூட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பெங்களூர், சென்னை

பெங்களூர், சென்னை

தென் இந்தியாவின் மாநிலத்தில் பெங்களூர், சென்னையில் அதிகப்படியான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது இந்தப் போட்டியில் கேரளாவும் இணைந்துள்ளது.

5 வருட வளர்ச்சி

5 வருட வளர்ச்சி

இந்தியாவில் கடந்த 5 வருடத்தில் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு பிரிவாக ஸ்டார்ட்அப் துறை விளங்கி வரும் வேளையில், ஒவ்வொரு மாநிலமும் அதிகப்படியான புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

டெல்லி ஆதிக்கம்

டெல்லி ஆதிக்கம்

இதன் விளைவாக இந்தியாவின் ஸ்டார்ட்அப் தலைநகரமாக விளங்கும் பெங்களூரை காட்டிலும், டெல்லியில் அதிகப்படியான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஸ்டார்ட்அப் யூனிகார்ன்

ஸ்டார்ட்அப் யூனிகார்ன்

இது மட்டும் அல்லாமல் 2021 வரையில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட்அப் யூனிகார்ன் நிறுவனங்களை காட்டிலும் 2021ஆம் ஆண்டில் மட்டும் அதிகப்படியான ஸ்டார்ட்அப் யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகி உள்ளது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இந்திய அரசு மட்டும் அல்லாமல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் அதிகப்படியான ஆதரவு அளிக்க மிக முக்கியமான காரணம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் குறுகிய காலகட்டத்தில் ஒரு சேவை உருவாக்கி, முதலீட்டை ஈர்த்து அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்பதால் தான்.

இந்திய அரசு

இந்திய அரசு

இந்திய அரசு மட்டும் அல்லாமல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் அதிகப்படியான ஆதரவு அளிக்க மிக முக்கியமான காரணம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் குறுகிய காலகட்டத்தில் ஒரு சேவை உருவாக்கி, முதலீட்டை ஈர்த்து அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kerala Competing with Tamilnadu, Karnataka in Creating Startups; Kerala Govt 5yrs Target

Kerala Competing with Tamilnadu, Karnataka in Creating Startups; Kerala Govt 5yrs Target சென்னை, பெங்களூருக்குப் போட்டியாக வரும் கேரளா.. பினராயி விஜயனின் புதிய 5 வருட திட்டம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.