டோலிவுட்டின் நியூ க்ரஷ் இவர்தான்..! யார் இந்த ஶ்ரீலீலா ?

ஹீரோயின்களை அழகுப் பதுமைகளாக காட்டுவதில் டோலிவுட் கில்லி. அந்த நாயகிகளுக்கு படத்தில் முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ அவர்கள் ஃப்ரேமில் ஜொலிப்பார்கள். பாடல் காட்சிகளில் மேக்கப், வித்தியாசமான டிசைன்களில் காஸ்ட்யூம் எனப் பல புரட்சிகளை உருவாக்குவர். அப்படி ஒரு ஹீரோயின் டோலிவுட்டின் க்ரஷ் மெட்டீரியலாக மாறிவிட்டால் போதும், அடுத்த ஆறேழு வருடங்களுக்கு செம பிஸியாகிவிடுவார்கள். அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எந்த மொழி படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் சரி, அரியணை ஏற்றுவது என்னவோ தெலுங்கு சினிமாதான்.

பல பாலிவுட் நாயகிகளை தென்னிந்திய சினிமாவுக்கு அழைத்து வருவதே டோலிவுட்தான். ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா, ட்விங்கிள் கண்ணா, தபு, கத்ரீனா கைஃப், அலியா பட், கியாரா அத்வானி என அந்த பட்டியல் நீளம். அதேபோல, தெலுங்கு சினிமாவில் நடித்து முடித்த பிறகு, பல ஹீரோயின்களுக்கு பாலிவுட் ஆஃபர்கள் குவிந்திருக்கின்றன. ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருப்பதற்கு முக்கிய காரணம், டோலிவுட்தான். அப்படியான டோலிவுட்டின் சமீபகால க்ரஷ் என்றால், அது ராஷ்மிகா மந்தனாதான். விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த படங்கள் எல்லாம் சவுத் இந்தியன் சென்சேஷனானது.

ராஷ்மிகா – பூஜா ஹெக்டே – கீர்த்தி ஷெட்டி

குறிப்பாக, ‘இன்கேம் காவாலே’ பாடல். உடனே, மகேஷ் பாபுவுடன் ‘சரிலேறு நீக்கேவரு’, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா’ என பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. இப்போது, பாலிவுட்டில் அமிதாப் பச்சனுடன் ‘குட் பை’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்ததாக, பூஜா ஹெக்டே. ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. ‘அலா வைகுந்தபுரமுலோ’ ப்ளாக்பஸ்டரான பிறகு, பூஜா ஹெக்டேவின் மார்கெட் எங்கேயோ போய்விட்டது. தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து என கலக்கி வருபவருக்கு, டோலிவுட்டிலும் குவிகின்றன படங்கள். இவர் நடித்த ‘ஹவுஸ்புல் 4’ படமும் பெரிய ஹிட்டாக, இந்தியிலும் வாய்ப்புகள் வருகின்றன. தற்போது, ரன்வீர் சிங்குடன் நடித்து முடித்திருக்கிறார்.

டோலிவுட் ரசிகர்கள் பூஜாவை ஆராதித்துக் கொண்டிருந்த சமயத்தில், கீர்த்தி ஷெட்டியின் என்ட்ரி ! ‘உப்பென்னா’ படம் நல்ல ஹிட். பாடல்களும் நல்ல ரீச். உடனே, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் என்ட்ரிக்காக பேசி வருகிறார்கள். என்னடா… கட்டுரையில் தலைப்புக்கும் இதுவரை சொன்னதுக்கும் சம்பந்தமில்லை என்றுதானே நினைக்கிறீர்கள். இதோ பாய்ன்ட்டுக்கு வந்துட்டேன். ஶ்ரீலீலா…

ஶ்ரீலீலா

ஆம், ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, கீர்த்தி ஷெட்டி வரிசையில் டோலிவுட்டின் புது க்ரஷ் ஶ்ரீலீலா. இந்த நால்வருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நால்வரும் கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்தான். கன்னடத்தில் இரண்டு படங்கள் நடித்திருந்த ஶ்ரீலீலாவை, தெலுங்கு சினிமா வரவேற்று, ‘பெல்லி சண்டாடி’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தியது. ராஷ்மிகாவுக்கு ஒரு ‘இன்கேம் காவாலே’, பூஜா ஹெக்டேவுக்கு ஒரு ‘ சாமஜ வரகமணா’, கீர்த்தி ஷெட்டிக்கு ஒரு ‘ ஜல ஜல ஜல பாதம் நுவ்வு’ அது போல, ஶ்ரீலீலாவுக்கு, ‘தொரக்க தொரக்க தொகிரந்தி’ பாடல். இதிலிருந்து என்ன தெரிகிறது ? ஒரு க்ரஷ் உருவாவதற்கு இசையமைப்பாளர் முக்கிய காரணமாக இருக்கிறார். அவருக்கு அந்த கிரெடிட்ஸ் கொடுக்க வேண்டுமல்லவா?

இந்தப் பாடல் பயங்கர ஹிட்டாகி, இன்ஸ்டா ரீல்ஸ் முழுக்க குவிந்திருக்கிறது. உடனே, அடுத்தடுத்து படங்கள் ஶ்ரீலீலாவுக்கு கிடைத்திருக்கின்றன. தற்போது, ரவி தேஜாவுக்கு ஜோடியாக ‘தமாகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஶ்ரீலீலாவை இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறது. அடுத்ததாக, இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தில், மூன்று ஹீரோயின்கள். அதில் ஒருவர் ஶ்ரீலீலா. முன்னணி ஹீரோவுடன் ஒரு படம் நடித்துவிட்டால், அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகள் வரும். விரைவில் தமிழ் என்ட்ரி கூட இருக்கலாம். ஏன், இந்த கட்டுரையை படிக்கும் நேரத்தில்கூட அவர் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம்.

ஶ்ரீலீலா

20 வயதேயான ஶ்ரீலீலா, பெங்களூருவில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். ”மருத்துவ படிப்பையும் நடிப்பையும் ஒரே நேரத்தில் கையாளுவது தனக்கு சவாலாக இருக்கிறது. ஆனால், சமீப காலமாக, அது பழகிவிட்டது” என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். செட்டுக்கு புத்தகங்கள் எடுத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி என மருத்துவம் படித்த சில ஹீரோயின்கள் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் வேளையில், மருத்துவம் படிக்கும் ஹீரோயினாக ஶ்ரீலீலா அந்தப் பட்டியலுக்கு க்யூட்டான நியூ என்ட்ரி திறம்பட செயல்பட வாழ்த்துகள் ஶ்ரீலீலா !

இந்தப் பாடலை மறக்காமல் பார்த்துடுங்க..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.