பிரபல ஆர்.ஜே. மாரடைப்பால் மரணம்: போகும் வயசாமா இது?

பிரபல கன்னட ஆர்.ஜே. ரச்சனா. அவர் கன்னட படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். பெங்களூரில் இருக்கும் ஜே.பி. நகரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.

39 வயதான ரச்சனா உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அப்படி இருக்கும்போது அவர் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஆர்.ஜே. ரச்சனா இறந்த செய்தி அறிந்த கன்ன திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ஸ்வேதா செங்கப்பா கூறியிருப்பதாவது,

ரச்சனா எனக்கு பிடித்த ஆர்.ஜே. அவர் பேசும் விதம் ரொம்ப பிடிக்கும். அவரை சந்தித்து பேசியது இல்லை. இனி அவரை பார்க்க முடியாது என்பது வேதனையாக இருக்கிறது என்றார்.

ஆர்.ஜே. பிரதீப் கூறியிருப்பதாவது,

உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் ஆர்.ஜே. ரச்சனா. நம்ம பெங்களூரின் சிறந்த ஆர்.ஜே.க்களில் ஒருவர். இளம் வயதில்
மாரடைப்பு
. என்ன நடக்கிறது என தெரிவித்துள்ளார்.

ரஜினிக்காக துணிந்து பெரிய ரிஸ்க் எடுத்த தனுஷ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.