T-Shirt வாங்குனா கிருமிகள் அண்டாது – Xiaomi எடுக்கும் புது ரூட்!

சீனாவின் சியோமி நிறுவனம் இந்தியாவில் T-Shirtகளை விற்பனை செய்வது இது முதல் முறையல்ல. Xiaomi இதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்ட முறை டி-ஷர்ட்களை விற்பனை செய்துள்ளது. நிறுவனம் Mi Eco Active T-Shirt ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. பல டிசைன்களில், பல வண்ண டி-ஷர்ட்களை சியோமி விற்பனை செய்து வந்தது. அதில் பல தொழில்நுட்பங்களை நிறுவனம் புகுத்தி இருந்தது.

தற்போது புதிய படைப்பாக Xiaomi இந்திய சந்தையில் வைரஸ் எதிர்ப்பு டி-சர்ட்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த டி-ஷர்ட் Anti Viral, Anti Bacterial ஆக இருக்கும். அதாவது கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளை இந்த டி-ஷர்ட்டுகள் அண்டவிடாது என்று கூறுகிறது சியோமி. இந்த அதிநவீன டி-சர்ட் புற ஊதா கதிர்களையும் தடுக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

Poco M4 Pro 5G: டர்போ ரேம், புதிய டைமென்சிட்டி 810 சிப்செட், 50MP ஷார்ப் கேமரா – விலை என்ன தெரியுமா?

மக்களை பாதுகாக்கும் சியோமி

இது தற்போது கருப்பு நிறத்தில் மட்டுமே பயனர்களுக்கு வாங்கக் கிடைக்கிறது. இதற்கு Xiaomi Performance T Shirt என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டி-சர்ட் குறித்து Xiaomi நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த குறிப்பில், “இந்த டி-சர்ட் ஆண்டி Microbial துணியால் செய்யப்பட்டது. ஒருமுறைக்கு மேல் கழுவினாலும் அதன் ஆற்றல் என்றுமே குறையாது. டி-ஷர்ட்டின் உள்ளேயும் வெளியேயும் 2 டிகிரி வெப்பநிலை வேறுபாடு இருக்கும். UVA, UVB ஆகியவற்றுக்கான பாதுகாப்பு வெளியில் விளையாடுவதை பாதுகாப்பானதாக ஆக்குகின்றன,” என்று தெரிவித்துள்ளது.

Redmi Smart Band Pro: அடேங்கப்பா… இவ்ளோ ஸ்பெஷலா இந்த ஸ்மார்ட் பேண்ட்… விலை என்னவா இருக்கும்?

சூரிய ஒளிக் கதிர்களால் உங்களை ஒன்றும் செய்ய இயலாது என்று விளம்பரப்படுத்துகிறது சியோமி நிறுவனம். மேலும், கொரோனா காலகட்டத்தில் இது போன்ற டி-ஷர்ட்டுகள் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

அதிரடி விலையில் அதிரடி பொருள்

மொத்தம் நான்கு அளவுகளில் இந்த டி-சர்ட்டுகள் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து விதமான அளவுகளுக்கும் ரூ.699 என்ற ஒரே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தாங்கள் சலுகை விலையில் கொடுத்து வருகிறோம் என்றும் இதன் உண்மையான விலை 1499 ரூபாய் எனவும் சியோமி தெரிவித்துள்ளது.

Redmi Note 11S: 108 MP கேமரா, AMOLED திரை, Stereo ஸ்பீக்கர்ஸ்… விருந்து படைத்த சியோமி!

இந்த டி-சர்ட்டுகள் Mi இணையதளம் மூலம் பயனர்கள் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். டி-சர்ட் ஏற்கனவே இணையதளத்தில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சியோமி நிறுவனம் பல புதுமையான தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

முக்கியமாக, பேட்டரியால் இயங்கும் பல எலக்ட்ரானிக் பொருள்களை இந்திய சந்தையில் களமிறக்க நிறுவனம் முனைப்புக் காட்டி வருவதாக உள் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விரைவில் சியோமி தரப்பில் இருந்து பேட்டரியால் இயங்கும், பைக், வீட்டு வேலை செய்யும் ரோபோட் ஆகிய டெக் சாதனங்களை எதிர்பார்க்கலாம்.

Read More:

பயனர்களின் பாதுகாப்புக்காக Twitter எடுத்த முடிவு… புதிதாக ‘Safety Mode’ அறிமுகம்!சியோமி Pad 5 டேப்லெட்டுடன் மல்லுக்கட்ட வரும் Oppo பேட்!வெளியாக தயாராகும் Apple மேக் கணினிகள்! உள்ளே என்ன சிப் இருக்கு தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.