அடடா.. அருமையான குடும்பம்: வெங்கட் பிரபுவிடம் கோரிக்கை வைத்த கங்கை அமரன்!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘
வலிமை
‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இதனை மீண்டும் வினோத் இயக்கத்தில் தனது 61 படத்தில் நடிக்கிறார் அஜித்.

‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை பலமடங்கு எகிற செய்துள்ளது.

கடந்த பொங்கலுக்கு ‘வலிமை’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. ஆனால் ஒமிக்ரான் பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ‘வலிமை’ படம் வெளியாகவுள்ளது.

அவர் என்னையவே அப்படிதான்யா நடத்துறாரு: நொந்து பேசிய கமல்..!

இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை எடுத்து விட்டதாக இயக்குனர்
வெங்கட் பிரபு
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து
கங்கை அமரன்
, ‘பிரேம்ஜியையும் படத்துக்கு கூட்டிட்டு போ’ என செல்லமாக கோரிக்கை வைத்துள்ளார்.

இவர்களின் செல்ல உரையாடலை ட்விட்டரில் ரசித்து வருகின்றனர் நெட்டிசன்கள். ‘வலிமை’ படத்தை தொடர்ந்து அஜித்தின் ஏகே 61 படத்தையும் வினோத்தே இயக்க உள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த வருடம் தீபாவளி ரிலீசாக ‘ஏகே 61’ யை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தல, தளபதி ரசிகர்களையே வியக்க வைத்த எதற்கும் துணிந்தவன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.