அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் போட்ட தடை.. ரஷ்யாவுக்கு செக்.. புடின் அடுத்த திட்டம் என்ன?!

ரஷ்யா செவ்வாய் அதிகாலையில் உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் இருக்கும் இரண்டு பிரிவினைவாத பிராந்தியங்களான டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) பகுதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அதிகாரப்பூர்வமாகச் சுதந்திரம் அளித்துத் தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டார் அதிபர் விளாடிமிர் புடின். இதன் மூலம் ரஷ்யா போர் செய்யாமலேயே உக்ரைன் எல்லைக்குள் நுழைந்துள்ளது.

ரஷ்யாவின் நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்கா நிதியியல் தடை விதித்துள்ள நிலையில், தற்போது பிரிட்டனும் அமெரிக்காவுடன் கைகோர்த்துத் தடை உத்தரவை வெளியிட்டுள்ளது.

ரஷ்யா கைப்பற்றிய 2 உக்ரைன் பகுதிகள் மீது ‘நிதியியல் தடை’.. அமெரிக்கா அதிரடி..!

ரஷ்யா உக்ரைன்

ரஷ்யா உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதை அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், ரஷ்யா யாரும் எதிர்பார்க்காத வகையில் எவ்விதமான போர், துப்பாக்கிச் சூடு செய்யாமல் உக்ரைன் நாட்டின் இரு பகுதிகளைக் கைப்பற்றித் தனது நாட்டின் எல்லையை விரிவாக்கம் செய்துள்ளது.

விளாடிமிர் புடின் ஒப்பந்தம்

விளாடிமிர் புடின் ஒப்பந்தம்

ரஷ்யா கைப்பற்றியுள்ள டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) பகுதிகளின் தலைவர்களுடன் நட்பு மற்றும் உதவி ஒப்பந்தங்களில் அதிகாரப்பூர்வமாக்க ரஷ்யா கையெழுத்திட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா-வின் தடை
 

அமெரிக்கா-வின் தடை

இந்த நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன், ரஷ்யா கைப்பற்றியுள்ள டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) பகுதிகள் மீது நிதியியல் தடை விதித்துள்ளது.

இந்தத் தடை மூலம் இவ்விரு பகுதிகளில் அமெரிக்க மக்கள்/நிறுவனத்தால் முதலீடு, வர்த்தகம், நிதியுதவி செய்ய முடியாது.

பிரிட்டன் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் போரிஸ் ஜான்சன்

அமெரிக்கா அரசின் நிதியியல் தடையைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தலைமையிலான பிரிட்டன் அரசு 5 ரஷ்ய வங்கிகள் மீதும் 3 முக்கிய ரஷ்ய பணக்காரர்கள் மீதும் தடை உத்தரவை விதித்துள்ளது.

5 வங்கிகள் 3 கோடீஸ்வரர்கள்

5 வங்கிகள் 3 கோடீஸ்வரர்கள்

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி பிரிட்டன் அரசு ரோசியா, ஐஎஸ் வங்கி, ஜெனரல் வங்கி, ப்ரோம்ஸ்வியாஸ் வங்கி மற்றும் பிளாக் சீ வங்கி ஆகிய 5 வங்கிகள் மீதும், விளாடிமிர் புடின் உடன் நெருங்கிய தொடர்புடைய ரஷ்ய நாட்டின் கோடீஸ்வரர்களான ஜெனடி டிம்சென்கோ, போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகியோர் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பணம், சொத்து முடக்கம்

பணம், சொத்து முடக்கம்

இந்தத் தடை மூலம் பிரட்டன் நாட்டில் இந்த 5 வங்கிகள் மற்றும் 3 கோடீஸ்வரர்கள் வைத்துள்ள பணம், சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும், மேலும் மூவரும் பிரிட்டன் நாட்டிற்குப் பயணம் செய்யத் தடை விதிக்கப்படுகிறது.

 விரைவில் ஐரோப்பா

விரைவில் ஐரோப்பா

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து 2 பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதன் வாயிலாக முதல் கட்ட தடை உத்தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளது எனப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் ஐரோப்பாவும் தடை உத்தரவுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

After USA, UK put sanctions on 5 Russian banks, 3 billionaires over capturing of Donetsk, Lugansk

After USA, UK put sanctions on 5 Russian banks, 3 billionaires over capturing of Donetsk, Lugansk அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் போட்ட தடை.. ரஷ்யாவுக்குச் செக்.. விளாடிமிர் புடின் அடுத்தத் திட்டம் என்ன..?

Story first published: Tuesday, February 22, 2022, 20:44 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.