அரபிக் குத்து 80 மில்லியன் ஆனதுக்கு காரணம் இப்படிதான்….!உண்மையை ஓப்பனாக சொன்ன நடிகை ரோஜாவின் மகன் …! ஷாக்கில் ரசிகர்கள்…!

பீஸ்ட்
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
அரபிக் குத்து
80 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், நடிகை ரோஜாவின் மகன் செய்துள்ள செயல் ரசிகர்களை ஷாக் ஆழ்த்தி உள்ளது.அரபிக் குத்து பாடல் இவ்வளவு பெரிய ஹிட் அடிக்க காரணமே பாட்ஸ் தான் என்றும்
விஜய்
ஹேட்டர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் நிலையில், நடிகை ரோஜாவின் மகன் அதை ஆமாம் என்று சொல்வது போல் செய்துள்ள விஷயம் பரபரப்பை கிளப்பி உள்ளது

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் 8 நாட்களில் 80 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது. இயக்குநர்
நெல்சன்
இயக்கத்தில் விஜய்,
பூஜா ஹெக்டே
நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு
அனிருத்
இசையமைத்துள்ளார். அரபிக் குத்து பாடலை
சிவகார்த்திகேயன்
எழுதி உள்ளார்.

குறும்புத்தனத்தை புகைப்படமாக வெளியிட்ட ஆண்ட்ரியா …! ரசித்து கமெண்ட் செய்யும் ரசிகர்கள்…!

அஜித்தின் வேறமாறி பாடலுக்கு இத்தனை நடிகர்கள் நடனமாடினார்களா? என்றால் இல்லை என்பதே பதிலாக வரும். ஆனால், விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு சமந்தா, பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், டிடி, அனிருத், அட்லி, அஞ்சனா ரங்கன் என ஏகப்பட்ட பிரபலங்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் நடனமாடிய வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

ஆனால், இந்தளவுக்கு அரபிக் குத்து பாடல் ஹிட் அடிக்க காரணம் விஜய் ரசிகர்கள் செய்யும் பாட்ஸ் வேலை தான் என அஜித் ரசிகர்கள் உள்பட விஜய்யின் ஹேட்டர்கள் பலரும் கமெண்ட் அடித்து ட்ரோல் செய்து வருகின்றனர். ஆர்கானிக்காக வரும் வியூஸ் அல்லாமல் ஃபேக் ஐடிக்கள் மூலம் வியூஸ்களை அள்ளுவதே இந்த பாட்ஸ் பித்தலாட்டம்

இந்நிலையில் தென்னிந்தியாவின் பிரபல நடிகை ரோஜா. நெஞ்சினிலே படத்தில் உன் தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா என விஜய் ரோஜாவுடன் நடனமாடி இருப்பார். பின்னர், காவலன் படத்தில் அசினின் அம்மாவாக விஜய்க்கு மாமியாராக
ரோஜா
நடித்திருப்பார். இந்நிலையில், ரோஜாவின் மகன் கிருஷ்ணா லோகித் செல்வமணி சமீபத்தில், தனது அம்மா ரோஜா மற்றும் அப்பா செல்வமணியுடன் இணைந்து அளித்த பேட்டி ஒன்றில், தான் ஒரு விஜய்யின் தீவிர ரசிகர் என்பதை நிரூபிக்க பேசிய பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஒரு ரசிகர் எத்தனை போலி கணக்குகளை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ள முடியும். நடிகை ரோஜாவின் மகன் கிருஷ்ணா லோகித் தன்னிடம் 100 ஜிமெயில் கணக்குகள் இருப்பதாகவும், அதன் மூலம் 10,000 தடவைக்கு மேல் விஜய் பட டீசர்கள், டிரைலர்கள் மற்றும் பாடல்கள் வந்தால் பார்த்து விடுவேன் என்று உண்மையை ஓப்பனாக உடைத்து சொல்லி உள்ளார்

ரோஜாவின் மகன் இப்படி பேசிய வீடியோவை ஷேர் செய்து விஜய்யின் பீஸ்ட் பட அரபிக் குத்து பாட்டுக்கு வந்த 80 மில்லியன் வியூஸும் இப்படித் தான் மோசடி செய்யப்பட்டு வந்ததாக விஜய் ஹேட்டர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். நடிகை ரோஜாவின் மகனே 100 கணக்குகள் வைத்திருந்தால், வெறித்தனமான விஜய் ரசிகர்கள் ஒவ்வொருவரும் எத்தனை கணக்குகளை வைத்து இப்படி பார்த்து அதிக வியூஸ்களை ஏற்றுகிறார்களோ என கிண்டல் செய்து வருகின்றனர்.

அதேசமயம், இந்த ட்ரோல்களை பார்த்து கடுப்பான விஜய் ரசிகர்கள், கேஜிஎஃப் டீசர் ஹிட் அடித்தால், பாட்ஸ் இல்லை. ரவுடி பேபி 1000 மில்லியனை கடந்தால் அது பாட்ஸ் இல்லை. விஜய் பாட்டு ஹிட் ஆனால் மட்டும் அது பாட்ஸ் என்று கதற வேண்டியது. ஏன் நீங்க இப்படி பல அக்கவுண்ட்களை கிரியேட் பண்ணி பார்ப்பது இல்லையா? அந்த திறமையும் உங்க கிட்ட இல்லையா? என்றும் பதிலுக்கு விஜய் ரசிகர்களும் ட்விட்டர் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.