கட்டிப்பிடித்த ரசிகர், தவறி விழுந்த தம்பி நடிகர்: அதிர்ச்சி வீடியோ

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவர் ஸ்டார்
பவன் கல்யாண்
பிப்ரவரி 20ம் தேதி மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் நரசாபுரத்திற்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.

காரின் மேற்கூரை திறந்தபடி வைத்து நின்று கொண்டிருந்த பவன் கல்யாணை பார்த்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார். காரின் மீது ஏறி அவருக்கு ஆரத்தி எடுத்தார்கள்.

இந்நிலையில் காரின் மேற்கூரையில் ஏறி நின்றார் பவன் கல்யாண். அப்பொழுது பாச மிகிதியால் ரசிகர் ஒருவர் காரின் மீது ஏறி பவன் கல்யாணை கட்டிப்பிடிக்க முயற்சி செய்தார். இதையடுத்து பேலன்ஸ் இழந்து பவன் கல்யாண் விழுந்துவிட்டார்.

நல்ல வேளையாக அவர் காரின் கூரையில் தான் விழுந்தார். கீழே விழுந்திருந்தால் அடிபட்டிருக்கும். பவன் கல்யாண் விழுந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, பவன் கல்யாணுக்கு போதிய பாதுகாப்பு இல்லையே என்று வருத்தப்படுகிறார்கள்.

பவன் கல்யாணுக்கு ஏதாவது ஆனது என்றால் யார் பொறுப்பேற்பது?. பார்த்து பத்திரமாக இருங்கள் அண்ணய்யா என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்-ஐஸ்வர்யா விஷயத்தில் திடீர் திருப்பம்: குட் நியூஸ் தான், ஆனால்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.