"மரியாதையைக் கற்றுக் கொடுங்கள்" – விமான ஊழியர்களைச் சாடிய பாலிவுட் நடிகை!

சித்ரங்கடா சிங் பாலிவுட் நடிகை. சமீபத்தில் அவர் பயணித்த Go First (முன்பு Go Air என்ற பெயரில் இருந்தது) விமானத்தில் நடந்த சம்பவத்தைத் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “மும்பையில் இருந்து டெல்லி செல்லும் கோ ஏர் 391 விமானத்தின் பணிப்பெண், மிக மூர்க்கத்தனமானவர், (சில பெயர்களை குறிப்பிட்டு) பணியாளர்களுக்கு எப்படி நடந்து கொள்வது என கற்றுக்கொடுங்கள். மரியாதை குறைவாக இத்தனை கர்வமாக நடந்து கொள்வதை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. இது மிகுந்த மன வருத்தம் தரக்கூடியது, இதற்கு முன்பு இதுபோலான என்னுடைய ஏர் இந்தியா அனுபவத்தை நினைவுபடுத்துகிறது” என எழுதி விமானத்திற்குள் எடுக்கப்பட்ட சிறிய வீடியோ கிளிப் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

சித்ரங்கடா பதிவு

அதற்கு அடுத்த ஸ்டோரியில், “இந்த சம்பவம் எனக்கு நிகழவில்லை. என்னருகே அமர்ந்திருந்த நபர் விமான பணிப்பெண்ணால் மோசமாக நடத்தப்பட்டார் இத்தனைக்கும் அந்த நபர் அமைதியாகவும் கண்ணியமாகவும் இருந்தார். இத்தனை ஆணவத்தோடு ஊழியர்கள் நடந்திருக்க கூடாது” என்று தெரிவித்திருந்தார். சித்ரங்கடா மட்டுமல்ல நடிகர் ஆர்யா பாப்பருக்கும் இதே போலான சம்பவம் ஏர் பர்ஸ்ட் விமானத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் 2021இல் ‘பாப் பிஸ்வாஸ்’ என்கிற படம் வெளியானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.