உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. போர்க்களக் காட்சிகள்..! <!– உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. போர்க்களக் காட்சிகள்..! –>

உக்ரைன் மீது ரஷ்யப் படையினர் பல முனைகளிலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அது குறித்துச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு காட்சிகள் வெளியாகியுள்ளன.

உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீதும் ரஷ்யாவின் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. வடக்கு கிழக்கு என இரு புறமும் எல்லைகள் வழியாகத் தரைப்படையினரும், பீரங்கிப் படையினரும் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் போர் நடைபெறும் நகரங்களில் இருந்து பாதுகாப்பான பிற நகரங்களுக்குச் செல்வதற்காகக் காரில் மக்கள் விரைந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நெடுந்தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 உக்ரைனின் வடகிழக்கில் ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள கார்க்கிவ் நகரையும் ரஷ்யப் படையினர் நெருங்கியுள்ளனர்.

 மேற்கு உக்ரைனில் பாதுகாப்பானதாகக் கருதப்படும் இவானா பிராங்கோவ்ஸ்க் விமான நிலையத்தின் மீது ஏவுகணைகளால் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணைகள் விழுந்ததும் குண்டுகள் வெடித்து அப்பகுதி தீப்பிழம்பாகக் காட்சியளித்தது.

 

The scene in Ukraine, as cars are trying to flee the area. pic.twitter.com/lUlB4jjfQP

— Doug Rush (@TheDougRush) February 24, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.