புரோ கபடி : பாட்னா – டெல்லி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பெங்களூரு,
12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதன் எலிமினேட்டர் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் , பாட்னா பைரேட்ஸ், யுபி யோத்தா, தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகியவை அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் மோதின . இந்த போட்டியில் 38-27 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணி வெற்றி பெற்றது 
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின .இந்த போட்டியில் 40-35 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது 
இதனில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.