தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஹங்கேரியில் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

ஹங்கேரிக்கான இலங்கையின் முழுமையான அதிகாரமுடைய மற்றும் அதிவிசேட தூதுவராக அங்கீகாரம் அளித்துள்ள நற்சான்றிதழ் கடிதங்களை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஹங்கேரி ஜனாதிபதியான ஜனோசிடர் அவர்களிடம் புடாபெஸ்டில் உள்ள சாண்டோர் மாளிகையில் வைத்து 2022 பிப்ரவரி 17 ஆந் திகதி கையளித்தார்.

நற்சான்றிதழ்களைக் கையளிக்கும் விழாவில் ஹங்கேரிய ஆயுதப் படைகளின் மரியாதை அணிவகுப்பைத் தொடர்ந்து, ஹங்கேரி ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கடிதங்கள் கையளிக்கப்படன. ஹங்கேரி ஜனாதிபதிக்கு சிரேஷ்ட அதிகாரிகள் உதவினர். நியூசிலாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கொசோவோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏனைய மூன்று தூதுவர்களும் அதே நாளில் ஹங்கேரி ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளித்தனர்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை மக்களின் வாழ்த்துக்களை ஹங்கேரி ஜனாதிபதி மற்றும் ஹங்கேரி நாட்டு மக்களுக்கு தூதுவர் மஜிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

விழா நிறைவுற்றதும், ஹங்கேரி ஜனாதிபதியுடன் சான்டர் அரண்மனையில் உள்ள ப்ளூ சலோனில் சந்திப்பு நடைபெற்றது.

இலங்கை – ஹங்கேரி விஷேட உறவுகள் பரஸ்பர நன்மைகளுடன் கூடிய பல பகுதிகளை அதிவேகமாக உள்ளடக்கியதாக தூதுவர் குறிப்பிட்டார். எதிர்வரும் ஆண்டுகளில் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இலங்கை நம்புகின்றது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நற்சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தூதுவர் மஜிந்த ஜயசிங்க அவர்கள் மாவீரர் சதுக்கத்திற்கு சென்று அங்கு ஹங்கேரிய மாவீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவித்தார்.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,
வியன்னா
2022 பிப்ரவரி 24

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.