பட்டப்பகலில் ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்த இளைஞர் வெட்டிக்கொலை ; கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை <!– பட்டப்பகலில் ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்த இளைஞர் வெட… –>

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பட்டப்பகலில் ஹோட்டலுக்குள் புகுந்த மர்ம நபர், அங்கு வரவேற்பு அறையில் இருந்த இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்ற அந்த இளைஞர், தம்பானூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். இரவு பணியை முடித்துவிட்டு காலை எட்டரை மணியளவில் வீட்டுக்கு புறப்படுவதற்காக ஐயப்பன் தயாராகிக் கொண்டிருந்த நேரம் பார்த்து அங்கு அரிவாளுடன் வந்த மர்ம நபர், ஐயப்பனை சரமாரியாக தாக்கினார்.

வெட்டுக்காயங்களுடன் துடிதுடித்த ஐயப்பன் நாற்காலியில் அமர்ந்திருந்தவாறே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நெடுமாங்காடு பகுதியைச் சேர்ந்த அஜீஸ் என்பவனை கைது செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, அஜீஸ் இரண்டு நாட்களுக்கு முன் அந்த ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்ததாகவும், அப்போது அஜீஸுக்கும், ஐயப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.