"எங்கள் மகனை மீட்டுக் கொடுங்கள்" புதுச்சேரி முதல்வரிடம் பெற்றோர் உறுக்கம்

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவரை மீட்டு தாயகம் அழைத்து வருமாறு முதல்வர் ரங்கசாமியிடம் மாணவரின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முத்தியால்பேட்டையைச் சேர்ந்த நித்திஷ்குமார் என்ற மாணவர் உக்ரைனில் வினிஸ்டா நகரில் மருத்துவம் பயின்று வருகிறார். தற்போது அங்கு போர் நடந்து வருவதால், உயிருக்கு அஞ்சியும் உணவு கிடைக்காமலும் தவித்து வருகிறார்.
இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியிடம் நேரில் முறையிட்ட மாணவரின் பெற்றோர், தங்கள் மகனை பத்திரமாக மீட்குமாறு கோரினர். உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்குமாறு கோரி பிரதமருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் முதலவர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
Nearly 16,000 Indian students stuck in Ukraine, most from Gujarat and  Kerala - Rediff.com India News
உக்ரைனில் உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வினிஸ்டாவில் தற்போதைய நிலை குறித்து நித்திஷ்குமார் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.