சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி…!நடிகை ராஷ்மிகா குடுத்த டிப்ஸ்…! என்ன தெரியுமா…?

கோலிவுட் டோலிவுட் சாண்டல்வுட் என பல மாநிலங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை
ராஷ்மிகா மந்தனா
.கன்னடத்தில் அறிமுகமான போதிலும் தெலுங்கில் நடித்த
கீதா கோவிந்தம்
மாபெரும் வெற்றி அடைந்து அவரை பற்றி அனைவரும் பேசும்படி செய்தது.ராஷ்மிகா கடைசியாக நடித்த தமிழ் படம் சுல்தான்.

கார்த்தி கதாநாயகனாக நடிக்க பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த போதும் வசூல் ரீதியாக அது ஒரு ஆவரேஜ் படமாக சொல்லப்பட்டது. படம் சுமாராக இருந்த போதும் அதில் கார்த்தியின் ஜோடியாக நடித்த ரஸ்மிகா மந்தனா கிராமத்து பெண்ணாக வலம் வந்து தனது க்யூட் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருப்பார்.

ஜிலேபி பே பி…! அடடடா…! என்னா டேஸ்டுயா.. ஜிலேபியை ரசித்து ருசிக்கும் ஸ்ம்ருதி வெங்கட்…!

ராஷ்மிகா தனது உற்சாகத்திற்கும் சந்தோஷத்திற்கும் காரணம் என்ன என்று ஒரு வீடியோவாக
இன்ஸ்டாகிராம்
பதிவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒட்டுமொத்த ரசிகர்களால் இந்தியாவின் கரஷ் என்று அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. நடித்த சில படங்களிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் காந்தம் போல இழுத்தவர்.

கடைசியாக அவர் கதாநாயகியாக நடித்த
புஷ்பா
படம் இந்தியா முழுக்க வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. அதில் ஸ்ரீ வள்ளி என்ற கதாபாத்திரமாக நடித்து அனைத்து உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளிலும் வெற்றி வாகை சூடி முதல் முறையாக இந்தியிலும் காலடி எடுத்து வைக்கிறார் ராஷ்மிகா.

மேலும் மிஷன் மஞ்சு என்ற
இந்தி
படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
சித்தார்த் மல்ஹோத்ரா
கதாநாயகனாக நடிக்க சாந்தனு பாக்ஸி இயக்கியுள்ளார்.
த்ரில்லர்
கதைக்களத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிய ராஷ்மிகா மந்தனா வடக்கிலும் உச்சியை தொடுவார் என ரசிகர்களால் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு வலைதளங்களில்
விஜய் தேவரகொண்டா
ராஷ்மிகாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் போன்ற செய்திகள் பரபரப்பாக எழுதப்பட்டன. அதற்கு பதில் தரும்படியாக விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபடியும் ‘ அதே நான்சென்ஸ் ‘ என்று பதிவிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது உற்சாகத்திற்கும் சந்தோஷத்திற்கு காரணம் என்ன தெரியுமா என்ற கேள்வியுடன் அதை பதிவிட்டுள்ளார். அதற்கான பதில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிரப்பட்ட வீடியோவில் பாடலில் இருக்கிறது.

அட்டகாசமான உடையில் அற்புதமான முக பாவங்களுடன் அழகான நடனத்தோடு அதை செய்து காட்டியுள்ளார். கையில் ஒரு கண்ணாடி கிளாஸ் நிறைய தண்ணீருடன் தனது உற்சாகத்திற்கு சந்தோஷத்திற்கும் காரணம்
தண்ணீர்
குடிப்பதுதான் என ஆடி முடிக்கிறார். பல விதமான கமெண்ட்ஸ் இந்த விடியோவுக்கு வந்து கொண்டு இருக்கிறது. ராஷ்மிகா 30 மில்லியன் பாலோவர்ஸ் விரைவில் தொட்டு விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.