நடிகர் ரஜினிகாந்திற்காக மொட்டை போட்டு கொண்ட லதா!


நடிகர் ரஜினிகாந்த் – லதா தம்பதி இன்று தங்களது 41வது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

லதாவை சந்தித்த முதல் தருணத்திலேயே ரஜினிகாந்த் அவர் மீது காதல் கொண்டார் என்பது தெரியுமா?

தில்லுமுல்லு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தான் இருவரும் முதன் முறையாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொண்டனர்.
அப்போது ரஜினியை பேட்டி எடுக்க வந்திருந்தார் லதா, பேட்டியின் போதே லதாவிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்கிறாயா? என கேள்விக் கேட்டு திணற வைத்தாராம் ரஜினி.

இதற்கு லதா பெற்றோரிடம் கேட்டு சொல்வதாய் கூறி சென்றார், என ரஜினியின் சகோதரர் சத்யநாராயணன் கூறியுள்ளார்.
லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பு நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தலையில் விழுந்தது.

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்தே ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரனைத் தெரியும். லதாவின் சகோதரி சுதாவை ஒய்.ஜி. மகேந்திரன் மணந்திருந்ததால் ரஜினிக்கு பெண் கேட்கும் வேலை எளிதாகிவிட்டது. மேலும் சத்யநாராயணாவும் லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி சம்மதம் வாங்கினர்.  

கடந்த 2012-ம் ஆண்டு ஒரு பேட்டியில், ரஜினி தன்னிடம் ஒருமுறை கூட காதலிப்பதாக சொல்லவில்லை. நேரில் பார்த்த போது திருமணம் செய்துக் கொள்வோமா என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார் என லதா குறிப்பிட்டு கூறியிருந்தார்.


ரஜினியை சந்தித்த தருணத்தில் ரஜினி நரம்பியல் பிரச்சனையில் இருந்து வெளிவந்துக் கொண்டிருந்தார். அவருக்கு தாய்மை அன்பு தேவை என்பதை உணர்ந்தார் லதா.

ரஜினி நரம்பியல் பிரச்சனையில் இருந்து வெளிவந்தால் மொட்டை அடித்துக் கொள்கிறேன் என்று வேண்டிக் கொண்டாராம் லதா. அதே போல ரஜினிக்கு சரி ஆனதும், மொட்டையும் அடித்துக் கொண்டார்.

அனைத்தும் சரியாகிய பிறகு 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.