இராணுவ உடையில் உக்ரைன் அதிபர்… வைரலாகி வரும் புகைப்படம் உண்மையா? பின்னணி என்ன?

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் சூழலில் ரஷ்யா, உக்ரைன்மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் உக்கரைனும் தன்னை தீவிரமாக பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் குடிமக்களும் போரில் பங்கு கொள்ள முன்வரவேண்டும் என்றும் அதற்குத் தேவையான ஆயுதங்களை அரசு வழங்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் உக்ரைனுக்குள் இராணுவப் படைகளை அனுப்பும் புடினின் முடிவுக்கு எதிராக ரஷ்யர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ‘இவர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி. உக்ரைன் தாயகத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் இராணுவப் பட்டாளத்துடன் இணைந்து தனது ஆடைகளை களைந்து இராணுவ சீருடை அணிந்தார். அவர் உண்மையான தலைவர்’ என்று தலைப்பிட்டு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இராணுவ உடையில் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைராகி வரும் படம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இப்புகைப்படம் டிசம்பர் 06, 2021 அன்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, டான்பாஸில் உள்ள உக்ரேனிய இராணுவத்தின் முன் வரிசை நிலைகளைப் (the front-line positions of the Ukrainian army) பார்வையிட்டபோது எடுக்கப்பட்டது என்றும் அப்போது எடுக்கப்பட்ட இன்னும் சில புகைபடங்களும் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

இது குறித்து உக்ரேனிய செய்தி நிறுவனமான Interfax -ன் அறிக்கை ஒன்றில் ‘டிசம்பர் 6, திங்கட்கிழமை உக்ரைனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, டோனெட்ஸ்க் பிராந்தியத்திற்கான தனது பணி பயணத்தின் போது கூட்டுப் படை நடவடிக்கை மண்டலத்தில் உக்ரேனிய இராணுவத்தின் முன் வரிசை நிலைகளைப் (the front-line positions of the Ukrainian army) பார்வையிட்டார்’ என்றும் ‘உக்ரைனின் ஆயுதப் படைகளின் தினத்தில் இராணுவத்தை வாழ்த்தினார்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.