உக்ரைன் யுத்தத்திற்கு அமெரிக்காவே அடிப்படை காரணம்! வடகொரியா குற்றச்சாட்டு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பான வட கொரியாவின் முதல் கருத்து வெளிவந்துள்ளது. வடகொரிய வெளியுறவு அமைச்சகம் ஒரு ஆய்வாளரின் அறிக்கையை வெளியிட்டு, தனது நிலைப்பாட்டை சூசகமாக தெரிவித்திருக்கிறது.

பாதுகாப்பிற்கான ரஷ்யாவின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்து ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தத்தைத் தொடர்ந்த அமெரிக்காவே, ஐரோப்பிய நெருக்கடியின் “மூலக் காரணம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

“ரஷ்யாவின் பாதுகாப்பிற்கான நியாயமான கோரிக்கையை புறக்கணித்து இராணுவ மேலாதிக்கத்தை” கடைபிடித்துள்ளது என்று சர்வதேச அரசியல் ஆய்வுக்கான சொசைட்டியின் ஆராய்ச்சியாளர் ரி ஜி சாங்வாஷிங்டனை குறைகூறியுள்ளார்.

மேலும் படிக்க | ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ஆதரவை கோரும் உக்ரைன் அதிபர் 

“உக்ரேனிய நெருக்கடியின் மூலக் காரணம் அமெரிக்காவின் தலையீடும், அதீதமான மத்தியஸ்தும் தான்’ என்று வட கொரிய வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

“அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை” என்ற பெயரில் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி, “இரட்டை நிலைப்பாட்டை” வைத்திருப்பதற்காக அமெரிக்காவை ரி ஜி சாங் கடுமையாக சாடினார். 

“அமெரிக்காவின் பெரியண்ணா பாணி முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள்படும் வகையில் ஆண்ட நாட்கள் போய்விட்டன” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பேஸ்புக்கிற்கான அணுகலை மட்டுப்படுத்தும் ரஷ்யா! காரணம் இதுதான்

வடகொரியாவின் இந்த கருத்துக்கு மிகப் பெரிய அளவில் அமெரிக்கா எதிர்வினையாற்றாது என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால், இது “குறைந்த முக்கியத்துவம்” வாய்ந்த கருத்தாகவே பார்க்கப்படும்.  

“புடினின் போர் இப்போது கிட்டத்தட்ட எல்லா புவிசார் அரசியலையும் வடிவமைக்கிறது, உக்ரைனின் திறனை நிலைநிறுத்த உதவுவதற்காக, டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், உடல் கவசம் மற்றும் சிறிய ஆயுதங்கள் உட்பட உக்ரைனுக்கு கூடுதல் $350 மில்லியன் இராணுவ உதவியை அமெரிக்கா உறுதியளித்தது. 

முற்றுகையிடப்பட்ட நாட்டிற்கு ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை அனுப்புவதாகவும், ரஷ்ய விமானங்களுக்கான வான்வெளியை மூடுவதாகவும் ஜெர்மனி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | உக்ரைனின் உதிரம் சிந்தும் போர்க்களத்தில் உதித்த குழந்தைப்பூ

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகியவை “தேர்ந்தெடுக்கப்பட்ட” ரஷ்ய வங்கிகளை SWIFT உலகளாவிய நிதிச் செய்தியிடல் அமைப்பிலிருந்து தடுக்க ஒப்புக்கொண்டன,

ரஷ்யா தனது தாக்குதலை முன்னெடுத்துச் செல்லும்போது, ​​மாஸ்கோவை மேலும் தனிமைப்படுத்தும் நோக்கில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைத் தண்டிக்கின்றன, அதே சமயம் எண்ணிக்கையில் அதிகமான உக்ரேனியப் படைகளை ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஆயத்தமாகின்றன.  

உக்ரைன் போர் தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது இறுதி திட்டங்களை வெளியிடவில்லை, ஆனால் மேற்கத்திய நாடுகளின் கணிப்புப்படி, ரஷ்யா தனது நாட்டை விரிவுபடுத்துவதாக போர் தொடுத்திருக்கும் திட்டத்தில் இருக்கிறது. 

 மேலும் படிக்க | நேரடியாக களத்தில் இறங்கிய உக்ரைன் அதிபர்

ஐரோப்பாவின் வரைபடத்தை மீண்டும் மாற்றியமைத்து, மாஸ்கோவின் பனிப்போர் கால செல்வாக்கை புதுப்பிக்கும் என்பதே ஐரோப்பிய நாடுகளின் எண்ணமாக இருக்கிறது. 

இந்தச் சூழலில் அமெரிக்கா மீதான சாடல், ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வடகொரியாவின் நிலைப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய நிலப் போரின் போது, இதுவரை மூன்று குழந்தைகள் உட்பட 198 பேர் கொல்லப்பட்டதாகவும் 1,000 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் உக்ரைனின் சுகாதார அமைச்சர் நேற்று (2022, பிப்ரவரி 26, சனிக்கிழமை) தெரிவித்தார்.

மேலும் படிக்க | உக்ரைன் யுத்தத்திற்கு சாட்சியாய் இந்திய மாணவியின் பதுங்குக்குழி அனுபவம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.