நாளை தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணீடாதீங்க..!

தங்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முதலீட்டு ஆப்சனாக பார்க்கப்படுகிறது. இது ஒரு பாதுகாப்பு புகலிடமாக திகழ்கிறது.

அதிலும் தற்போது ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி பதற்றமான நிலைக்கு மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திரங்கள் என்பது ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாகவும் பார்க்கப்படுகின்றது.

பாதுகாப்பு புகலிடம்

பொதுவாக தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுவதால், இறையாண்மை தன்மை கொண்ட முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வாங்கி வைப்பது நீண்டகால நோக்கில் லாபகரமானதாக இருக்கலாம்.

எப்போது தொடக்கம்?

எப்போது தொடக்கம்?

நிலவி வரும் நெருக்கடியான காலக்கட்டத்தில் வந்தாலும், முதலீட்டுக்கு மிக சிறந்த நேரமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள் தங்கத்தினை பாதுகாப்பு புகலிடத்தினை நாடத் தொடங்கியுள்ளதால், நடப்பு நிதியாண்டில் 10 சீரிஸ் ஆன இது பிப்ரவரி 28, 2022 அன்று தொடங்கவுள்ளது. மார்ச் 4 அன்று முடிவடையவுள்ளது. ஆக இந்த 5 நாட்கள் இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம்.

விலை எவ்வளவு?
 

விலை எவ்வளவு?

ஒரு கிராம் தங்கம் விலை 5109 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது விலை அதிகம் என்று தோன்றினாலும் சர்வதேச சந்தையில் தொடர்ந்து விலையானது அதிகரித்து வரும் நிலையில், அது இந்திய சந்தையிலும் எதிரொலிக்கலாம். இதன் காரணமாக விலையானது இன்னும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். நிபுணர்கள் ஏற்கனவே கடந்த ஆண்டு உச்சத்தினை உடைக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

மிக நல்ல வாய்ப்பு

மிக நல்ல வாய்ப்பு

ஆக இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு, இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் மீதான ஆர்வம் என்பது அதிகம். அதிலும் தற்போது இந்த பேப்பர் தங்கத்தின் மீதும் ஆர்வம் கூடிக் கொண்டே செல்கிறது. ஆக தங்கம் பத்திரங்கள் என்பது மிகச் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

தற்போது நிலவி வரும் காலகட்டத்தில் கொரோனாவின் அச்சம் குறைந்திருந்தாலும், ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றம், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். மேலும் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு மாற்று

தங்கத்திற்கு மாற்று

பிசிகல் தங்கத்திற்கு மாற்று ஆக இந்த தங்க பத்திரங்கள் அமையலாம். பொதுவாக பிசிகல் தங்கமாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என்ற செலவினங்கள் உள்ளன. அதோடு பாதுகாப்பு குறித்தான பிரச்சனையும் உள்ளது. இவற்றோடு தரம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஓன்றாக உள்ளது. இதனால் தான் பிசிகல் தங்கமாக அல்லாமல், டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கவர்ச்சிகரமான முதலீடு

கவர்ச்சிகரமான முதலீடு

ஆரம்பத்தில் தங்க பத்திர திட்டம் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகத் தான் இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் தற்போது சிறந்த ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

எவ்வளவு வாங்கலாம்?

எவ்வளவு வாங்கலாம்?

பொதுவாக ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும்.

எங்கு வாங்கலாம்?

எங்கு வாங்கலாம்?

இந்த தங்க பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க உங்கள் டீமேட் கணக்கு தேவைப்படும். வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது வங்கிகளின் டிஜிட்டல் தளத்திலும் மூலம் எளிதாக வாங்கிக் கொள்ளலாம்.

ஆன்லைனில் வாங்கலாம்

ஆன்லைனில் வாங்கலாம்

அங்கு டிஜிட்டல் வங்கி மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும். அவ்வாறு ஆன்லைன் மூலமாக வாங்குபவர்கள் 10ம் கட்ட வெளியீட்டில் 5,059 ரூபாய் செலுத்தினால் போதுமானது.

கடன் பெறலாம்

கடன் பெறலாம்

பிசிகல் தங்கத்தினை போன்றே இந்த தங்க பத்திரங்களையும் பிணையமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் முதிர்வுகாலம். ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு.

வட்டியும் உண்டு

வட்டியும் உண்டு

பொதுவாக நாம் தங்கமாக வாங்கினால் அதற்கு வட்டி கிடையாது. மாறாக செய்கூலி, சேதாரம் என கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.

வரி சலுகை உண்டா?

வரி சலுகை உண்டா?

கேபிட்டல் டேக்ஸ் தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் முன் கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.

பிசிகல் தங்கமாக கிடைக்குமா?

பிசிகல் தங்கமாக கிடைக்குமா?

பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் இது. இந்த தங்க பத்திரங்களுக்கு பதிலாக தங்கமாக வாங்கிக் கொள்ள முடியுமா என்று? இந்த தங்க பத்திரம் பிசிகல் தங்கத்தினை குறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். மேலும் முதலீட்டு நோக்கில் உருவாக்க பட்ட ஒரு திட்டம். ஆக இந்த திட்டத்தில் நாம் பிசிகல் கோல்டாக பெற முடியாது. பணமாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SGB update: Sovereign Gold Bond Scheme opens tomorrow: check details

SGB update: Sovereign Gold Bond Scheme opens tomorrow: check details /நாளை தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணீடாதீங்க..!

Story first published: Sunday, February 27, 2022, 11:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.