ராஷ்மிகாவை பார்த்து அப்படி சொன்ன ரசிகர்…அதற்கு ராஷ்மிகா என்ன செய்தார் தெரியுமா ?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்
ராஷ்மிகா
. 2016 ஆம் ஆண்டு கிரீக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார் ராஷ்மிகா. அதன் பின் அஞ்சனி புத்ரா மற்றும் சம்மக் ஆகிய கன்னட படங்களில் நடித்து கன்னட திரையுலகில் பிரபலமானார்.

இருப்பினும் 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த
கீதா கோவிந்தம்
திரைப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கலகலப்பான காதல் மற்றும் காமெடி படமாக உருவான கீதம் கோவிந்தம் படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

யுவன் ஷங்கர் ராஜாவுடன் பிரச்சனையா ? .போனி கபூர் ஓபன் டாக் ..!

அதைத்தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார் ராஷ்மிகா. மேலும் தமிழில்
கார்த்தி
நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்திலும் அறிமுகமானார் ராஷ்மிகா.

ராஷ்மிகா

இந்நிலையில் கடந்தாண்டு
அல்லு அர்ஜுன்
நடிப்பில் வெளியான
புஷ்பா
திரைப்படம் இவரை ஹிந்தி திரையுலகிற்கு அழைத்து சென்றுள்ளது. அப்படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பினால் ராஷ்மிகாவிற்கு பல பாலிவுட் படவாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது ராஷ்மிகா தன் படவேளை காரணமாக மும்பைக்கு சென்றுள்ளார்.

அப்போது மும்பை ஏர்போட்டியில் அவரை கண்டவுடன் பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் ராஷ்மிகாவை சூழ்ந்துகொண்டனர். இருப்பினும் ராஷ்மிகா அவர்களுடன் சகஜமாக உரையாடிக்கொண்டே சென்றார். ஒருவர் ராஷ்மிகாவிடம் எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரிக்க அதற்கு ராஷ்மிகா நலமுடன் இருப்பதாக பதிலளித்தார்.

View this post on Instagram A post shared by Viral Bhayani (@viralbhayani)

மேலும் ரசிகர் ஒருவர் நீங்க செம கியூட்டா இருக்கீங்க என ராஷ்மிகாவை பார்த்து சொன்னார். அதற்கு ராஷ்மிகா ரொம்ப நன்றி என்று கூறி செம கியூட்டான ரியாக்க்ஷன் ஒன்றை கொடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானாவை அதிர வைத்த தல அஜித்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.