வலிமை இண்டர்வெலில் அரபிக் குத்து… எழுந்து ஆடி என்ஜாய் செய்த ரசிக்ரகள்!

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கிய படம்
வலிமை
. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் கடந்த 24ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

கேப்டனா இது… மனம் வலிக்கிறது… விஜயகாந்தின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்!

படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும்
அஜித் ரசிகர்கள்
கொண்டாடி வருகின்றனர். படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் ராம் சினிமாஸ் தியேட்டர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளது.

காதல் கணவருடன் செம ரொமான்ஸ்… ரகளை செய்யும் சீரியல் நடிகை!

அதில் வலிமை படத்தின் இண்டர்வெலில் விஜய்யின் அரபிக்குத்து பாடல் ஒளிபரப்பப்படுகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் எழுந்து நின்று சட்டையை கழட்டி ஆட்டம் போட்டு வருகின்றனர். இதனை அஜித் ரசிகர்
அரபிக் குத்து
பாடலை கொண்டாடுவதாக ராம் சினிமாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இதனை பார்த்த ரசிகர்கள் மட்டும்தான் வலிமை படம் பார்ப்பார்களா? வலிமை படத்தை
விஜய் ரசிகர்கள்
பார்க்க மாட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அரபிக் குத்து பாடலுக்கு சட்டையை கழட்டி நடனமாடுவதால் அவர்கள் விஜய் ரசிகர்களாக தான் இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய் அஞ்சலி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.