தனுஷின் ‘மாறன்’ டிரெய்லர் வெளியானது…

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது. மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் மார்ச் 11 ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. தமிழில் தனுஷ் நடிப்பில் இதற்கு முன் வெளியான ஜெகமே தந்திரம் படமும் ஓ.டி.டி.யில் வெளியான நிலையில் இந்த திரைப்படமும் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பது தனுஷ் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. மாறன் … Read more

அப்போது குலக்கல்வி… இப்போது நீட் தேர்வு: சுயசரிதை வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள தன்வரலாற்று நூலான “உங்களில் ஒருவன் பாகம் – 1” நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. நூலை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டார். விழாவின் நிறைவாக முதல்வர் ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். அவர் பேசியதாவது:- எப்போதும், என்றென்றும், எந்தச் சூழலிலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும் – உங்களில் ஒருவன்தான் நான் என்பதை எந்த நாளும் இந்த ஸ்டாலின் மறக்க மாட்டான் என்பதன் அடையாளமாகத்தான் எனது … Read more

சமாஜ்வாடி பிரச்சார கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் – 7 பேர் மீது வழக்குப் பதிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 6 ஆம் கட்ட தேர்தல் 3ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்ற சமாஜ்வாடி கட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பபட்டதாக புகார் எழுந்தது. அந்த பிரச்சார கூட்டத்தின் வீடியோவை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.   அது சமாஜ்வாடி கூட்டம் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் வீடியோவில் இருக்கும் வேட்பாளர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை … Read more

பெலாரஸ் எல்லையில் ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது

கோமல்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷியாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.  இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் … Read more

செபி தலைவராக மாதாபி நியமனம்

புதுடெல்லி: இந்திய பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் (செபி) தலைவராக, அதன் முன்னாள் முழு நேர உறுப்பினர் மாதாபி பூரி புச் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இருந்த அஜய் தியாகியின் 5 ஆண்டு கால பதவிக் காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. செபி தலைவராக 3 ஆண்டு காலத்துக்கு அவர் 2017 மார்ச் மாதம் பதவியேற்றார். அதன் பிறகு, ஆகஸ்ட் 2020 வரை 6 மாதங்கள் பதவி … Read more

அந்தமான் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை நோக்கி அடுத்த மூன்று நாட்களுக்குள் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தி.மு.க.,வின் கனவு பலிக்காது அ.தி.மு.க., செயலர் ஆவேசம்| Dinamalar

புதுச்சேரி, : தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த தி.மு.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து, புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர், இணைச் செயலாளர் அன்பானந்தம் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி பேசியதாவது:தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க., அறிவித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் … Read more

பிரஜின் நடிப்பில் உருவாகும் அரசியல் க்ரைம் த்ரில்லர்

ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ஸ் சார்பில் எஸ்.வி.சூரியகாந்த் தயாரிக்கும் படத்தை, சங்கர் – கென்னடி இரட்டையர்கள் இயக்குகிறார்கள். இந்த படத்தில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஆஜீத் நாயக் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பிரகயா நயன், ரஷ்மி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, ஷோபராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். வினோத்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், விஜய் யாட்லீ இசை அமைக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்புகள் தர்மபுரியில் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து … Read more

காற்று மாசை குறைக்க தவறினால் நிலைமை மோசமாகும்: ஐ.நா.,

நியூயார்க் : ‘உலகில் பருவ நிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகரித்து வருவதால் அடுத்த, 18 ஆண்டுகளில் மக்கள் நோய், பசி, பட்டினி, வறுமையால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என, ஐ.நா., எச்சரித்துள்ளது. ஐ.நா., விஞ்ஞானிகள் குழு, பருவ நிலை மாற்ற அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:வரும் ஆண்டுகளில் பருவ நிலை மேலும் மோசமாகும். உலகில் கரியமில வாயு வெளியேற்றத்தால் வெப்பம் அதிகமாகும். இந்நிலையில், வெப்ப அளவு இயல்பை விட 2 டிகிரி … Read more