‘எங்கள் கண்ணீரைப் பாருங்கள்; ரஷ்யாவின் பொய்யை அல்ல’ : ஐநாவில் உக்ரைன்

ஜெனிவா: ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்  (UNGA)  அவசரக் கூட்டத்தில், பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. ஐநாவின் 11வது அவசரகால சிறப்பு அமர்வில்  உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ராஜீய நிலையிலான பாதைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று புது தில்லி உறுதியாக நம்புகிறது என்றார்.

‘இயன்ற அனைத்தையும் செய்கிறோம்’

டிஎஸ் திருமூர்த்தி உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பிரச்சினையை எழுப்பினார், மேலும் உக்ரைனில் இருந்து தனது குடிமக்களை உடனடியாக வெளியேற்ற இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார். இது ஒரு முக்கியமான மனிதாபிமானப் பிரச்சினை என்றும், இதில் உடனடி கவனம் தேவை என்றும் அவர் உறுப்பு நாடுகளிடம் கூறினார். உக்ரைனில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்

உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு நன்றி

இந்திய மாணவர்களை வெளியேற்ற உதவுவதற்காக எல்லைகளைத் திறந்த உக்ரைனின் அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பிரதிநிதி நன்றி தெரிவித்தார். “எங்கள் குடிமக்களுக்கு தங்கள் எல்லைகளைத் திறந்து, எங்கள் மீட்பு பணிகளுக்கும் அவர்களின் பணியாளர்களுக்கும் அனைத்து வசதிகளையும் வழங்கிய உக்ரைனின் அனைத்து அண்டை நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார். நமது அண்டை நாடுகளுக்கும், வளரும் நாடுகளில் உள்ளவர்களுக்கு உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

‘ரஷ்யாவின் பொய்யை அல்ல, எங்கள் கண்ணீரைப் பாருங்கள்’

அதேநேரம், இந்தக் கூட்டத்தில் ரஷ்யா மீது உக்ரைன் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ரஷ்யாவின் பொய்களை புறம் தள்ளி, எங்கள் கண்ணீரைப் பாருங்கள், எங்கள் வலியை உணருங்கள் என்று உக்ரைன் பிரதிநிதி கூறினார். உங்களின் உதவி எங்களுக்கு தேவை. ரஷ்ய இராணுவம் எங்கள் நாட்டில் அழிவை ஏற்படுத்துகிறது, அதை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இருப்பினும், ரஷ்யா தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்கள் இலக்கு அல்ல என்று கூறியது. ரஷ்யாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை உக்ரைன் தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா ஆதரித்து, உக்ரைன் தப்பிக்கவில்லை என்றால் ஐக்கிய நாடுகள் சபையும் தப்பிக்காது என்றும் அது மாயை அல்ல என்றும் கூறினார்.

ரஷ்யாவைக் கண்டித்த  தலைமை செயலாளர் 

போரில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் இந்த அவசர கூட்டம் தொடங்கியது. இதையடுத்து, ஐநா  தலைமை செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ரஷ்யாவை கடுமையாக சாடினார். என்ன விலை கொடுத்தாலும் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்றார். குட்டரெஸ், ‘போதும் போதும். படை வீரர்கள் தங்கள் படைகளுக்குத் திரும்ப வேண்டும், தலைவர்கள் சமாதானம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். குடிமக்கள்  எந்த விதமான சூழ்நிலைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.