கார்கிவ் நகரிலிருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுரை| Dinamalar

கீவ்: ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள கார்கிவ் நகரில் இருந்து, அந்நாட்டு நேரப்படி மாலை 6 மணிக்குள், இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை: கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்களுக்கு அவசர அறிவுரை- பாதுகாப்பு கருதி அனைவரும் கார்கிவ் நகரில் இருந்து உடனடியாக வெளியே வேண்டும். வெகு விரைவில் பெசோசின், பபயே, பெஜ்லுடோவ்கா நகரங்களுக்கு செல்ல வேண்டும். மாலை 6 மணிக்குள் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.