தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2022: விண்ணப்பங்கள் அனுப்பலாம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 17 துறைகளில் 7 சிறப்பு பிரிவுகளில், தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2022-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை, தனது 3வது தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளை தொடங்கியுள்ளது. விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை முன்னிட்டு, தொடங்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் விருதுகள் 22, ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும், இந்தியாவின் வளர்ச்சி கதைக்கு காரணமாக இருப்பவர்களையும், தற்சார்பு இந்தியாவுக்கான ஆற்றலை கொண்டுள்ளவர்களையும் அங்கீகரிக்கவுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில், முதல் தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நாடு முழுவதும் இருந்து 1,600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. சமீபத்தில் முடிந்த 2021-ம் ஆண்டு ஸ்டார்ட் அப் விருதில், 2,200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த இரண்டு ஸ்டார்ட் அப் விருது நிகழ்ச்சிகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டபின், தற்போது 2022ம் ஆண்டுக்கான தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த ஸ்டார்ட் அப் விருதுகள் 17 துறைகளில், 50 துணைப் பிரிவுகளில் வழங்கப்படவுள்ளன. வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, கட்டுமானம், குடிநீர், கல்வி மற்றும் திறன் மேம்பாடு, எரிசக்தி, நிறுவன தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், நிதி தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், சுகாதார நலன், தொழில்துறை 4.0, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, பாதுகாப்பு, விண்வெளி, போக்குவரத்து மற்றும் பயணம் ஆகிய 17 துறைகளில் ஸ்டார்ப் அப் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

கூடுதலாக, 7 சிறப்பு பிரிவு ஸ்டார்ட் அப் விருதுகளும் உள்ளன.

பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

ஊரக பகுதிகளில் தாக்கம்

ஸ்டாட் அப் நிறுவனங்களின் வளாகம்

சிறப்பான உற்பத்தி

தொற்றை சமாளிக்கும் புதுமை கண்டுபிடிப்பு (தடுப்பு நடவடிக்கை, பரிசோதனை, கண்காணிப்பு, டிஜிட்டல் இணைப்பு, வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான தீர்வுகள் )

இந்திய மொழிகளில் வர்த்தக செயல்பாடுகள் மற்றும் தீர்வு விநியோகம்

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பகுதி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.

வலுவான ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்கும் விதிவிலக்கானவர்களுக்கும் இந்த தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2022 வழங்கப்படும்.

வெற்றிபெறும் ஒவ்வொரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கும் ரூ.5 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும். வெற்றி பெறுபவர்கள், அடுத்த இடங்களை பிடிப்பவர்களுக்கு தங்கள் தீர்வுகளை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கார்ப்ரேட்டுகள் முன் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வழங்கப்படும். இதன் மூலம் முன்னனி திட்டங்களுக்கான ஆர்டர்களை முதலீட்டார்களிடம் இருந்து பெரும் வாய்ப்பு ஏற்படும். அவர்கள் தேசிய அளவில் மற்றும் சர்வதே அளவில் நடைபெறும் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்.

வெற்றிபெறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க உதவியாக இருந்தவர்களுக்கும் , தூண்டியவர்களுக்கும் தலா ரூ. 15 லட்சம் ரொக்கபரிசு வழங்கப்படும்.

தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2022க்கான விண்ணப்ங்கள் மார்ச் 15ம் தேதி முதல் கிடைக்கும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.