ரஜினியின் இந்த மனசு யாருக்கும் வராது..தலைவர் வேற லெவல்..!

நடிகர்
ரஜினி
தமிழ் சினிமாவில் செய்த சாதனைகளைப்பற்றி அனைவரும் அறிந்ததே. சிறுசிறு கதாபாத்திரங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்பு வில்லனாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் ரஜினி. அதன் பிறகு கமலுடன் இணைந்து நடித்து வந்த ரஜினிக்கு ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணமே இல்லையாம்.

கமல்தான் தன்னுடன் இணைந்து நடிப்பதை விட்டுவிட்டு ஹீரோவாக நடிக்க ரஜினியை வற்புறுத்தினாராம். தனது நெருங்கிய நண்பரின் பேச்சை கேட்டு ரஜினி ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதுதான் அவரின் அசுர வளர்ச்சிக்கு ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.

முடிந்தது விக்ரம் ஷூட்டிங்..!ஆனா அத மட்டும் இன்னும் ரகசியமா வெச்சிருக்காங்களே ?

அவரின் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் வசூலில் சாதனை படைக்க கமலுக்கு இணையான நடிகராக உயர்ந்தார் ரஜினி. என்னதான் ரஜினி மற்றும் கமலின் ரசிகர்கள் அவ்வப்போது மோதிக்கொண்டாலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இன்றளவும் இருக்கின்றனர்.

ரஜினி

தமிழ் சினிமாவில் ஒருபக்கம் கிளாஸான படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தார்
கமல்
.அதே சமயம் மறுபக்கம் மாஸான கமர்ஷியல் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் ரஜினி. இவ்விருவரும் தனித்தனியே தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றார்கள்.

இந்நிலையில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பில் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் வெளியான படம்
எந்திரன்
. இப்படத்தில் ரஜினி மூன்று விதமான கதாபாத்திரதத்தில் நடித்து அசத்தியிருப்பார். இதுப்பற்றி ஒரு பேட்டியில் தொகுப்பாளர் கேட்க அதற்கு ரஜினி இதுல என்ன இருக்கு நடிகர் கமல் எல்லாம் பத்து கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளார், என்று கூறியுள்ளார்.

ரஜினி

என்னதான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை இருவரும் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். இந்நிலையில் தன்னை விட கமலின் நடிப்பு தான் சிறந்தது என்பதுபோல் ரஜினி பேட்டிகளில் குறிப்பிட்டு வருவது அனைவரது பாராட்டையும் பெற்றுவருகிறது.

சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் ஒரு நடிகர் அவரின் அந்தஸ்த்தில் இருக்கும் மற்றொரு நடிகரை புகழ்வது அரிதான ஒன்று என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

தெலுங்கானாவை அதிர வைத்த தல அஜித்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.