அட்டென்ஷன் ப்ளீஸ்… மறந்தும் இந்த காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க!

Tamil Health Update : பொதுவாக நம் வீடுகளில் காய்கறிகள் பழங்கள் மற்றும் கீரை வகைகளை பாதுகாப்பதற்காக பிரிஜ்சில் வைப்பது வழக்கமான நடைமுறையாகிவிட்டது. ஒரு வாரத்திற்கு தேவையாக காய்கறிகளை ஒரே நாளில் வாங்கி அதனை பிரிஜ்சில் வைத்து பயன்படுத்தவது தற்போது அதிகரித்து வருகிறது.

உணவு பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ந்நியை தடுக்கும் தன்மை உள்ள பிரிஜ்சில் பொதுவாக 30 முதல் 38 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் வைக்கும் உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். அதே சமயம் அனைத்து பொருட்களையும் பிரிஜ்சில் வைத்து பயன்படுத்துவது தீமையை ஏற்படுத்தும்.

தக்காளி, வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு பப்பாளி, கத்தரிக்காய் போன் காய்கறிகயை பிரிஜ்சில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தக்காளி

தக்காளியை ப்ரிஜ்சில் வைத்து பயன்படுத்தும்போது அதன் தரம் குறைந்துவிடுகிறது. தக்காளியை அதிக நாட்கள் பிரிஜ்சில் வைத்திருந்தல், அதன் மென்மை தன்மை நீங்கிவிடும் வெளிப்புற தோல்கள் சுருங்கி அதன் சுவையை இழந்துவிடும். இதனால் தக்காளியை காற்றோற்றமான இடத்தில்வைப்பது நல்லது.

கத்தரிக்காய்

ப்ரிஜ்சின் வெப்பநிலை 50 டிகிரி பாரன்ஹீட்க்கு கீழே இருக்கும்போது கத்தரிக்காய் அதன் தனித்தன்மையை இழந்துவிடும். அதேபோல் பிற காய்கறிகளுடன் கத்தரிக்காயை வைப்பதற்கு பதிலாக தனியாக வைத்து பராமரிப்பது அதன் சுவை மற்றும் தனித்தன்மை முழுமையாக கிடைக்க வழி செய்யும்.

பிரெட்

குளிர்ந்த வெப்பநிலையில், பிரெட் சீக்கிரம் காய்ந்துவிடும். இதனால் பிரிஜ்சில் பிரெட்டை வைப்பதற்கு பதிலாக வெளியில் வைத்து பராமரிப்பது நல்லது.

வெங்காயம்.

பிரிஜ்சில் வைத்த வெங்காயம் தனது தனித்தன்மையை இழக்கிறது. மேலும் அதில் பூஜ்சைகள் பரவ வாய்ப்புள்ளது. மேலும் பிரிஜ்சில் வைத்து பயன்படுத்தவதை விட வெங்காயத்தை காற்றோற்றமான இடத்தில் வைப்பது நீண்ட நாட்கள் பலனை கொடுக்கும்.

பூண்டு

ஆரோக்கிய நன்மைகளை அதிகம் உள்ளடக்கியுள்ள பூண்டுவை, வெளியில் வைத்து பராமரிக்க வேண்டும். பிரிஜ்சில் வைத்தால் அதில் இருக்கும் குளிர்ந்த வெப்பநிலை பூண்டின் மென்மை தன்மையை போக்கிவிடும். இதனால் பூண்டு கடினமான நிலைக்கு சென்றுவிடும். இதனால் பூண்டை காற்றோறமான இடத்தில் வைத்து பயன்படுத்துவது நன்மை தரும்

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை பிரிஜ்சில் சேமித்து வைப்பது அதன் மாவுச்சத்தை பாதிக்கும். அதன் சுவையும் குறைந்துவிடும் நீண்டநாட்கள் பிரிஜ்சில் வைத்திருந்தால் உருளையில் மேற்புறத்தோல் கருமை நிறத்திற்கு மாறிவிடும்.  

ஆரஞ்சு

பல ஆரோக்கிய நன்மைகள் தரும் ஆரஞ்சு பழத்தில் அமிலத்தன்மை அதிகம் உள்ளது. இதில் பிரிஜ்சில் சேமித்து வைத்தால் அதன் மேற்புறத்தில் கருமை நிற புள்ளிகள் தோன்றும். மேலும் தோல் கடினமாதாக இருப்பதே ஆரஞ்சு பழத்தின் பாதுகாப்புக்கு நல்லது.

பப்பாளி மற்றும் தேன்

பப்பாளியை காற்றோற்றமான இடத்தில் வைத்தால் தான் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அதே போல் இயற்கையாகவே தன்தை பாதுகாத்தக்கொள்ளும் திறன் கொண்ட தேன், அறை வெப்பநிலையில் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் கெடாமல் இருக்கும். ஆனால் பிரிஜ்சில் வைக்கும்போது அதன் தன்மை மாறிவிடும்.

வாழைப்பழம்

வெப்பமான காலநிலையில் வளரும் வாழைப்பழம், அறை வெப்பநிலையில் இருக்கும்போது அதன் ஊட்டச்சத்துக்ள் சீராக இருக்கும். ஆனால் அதனை பிரிஜ்சில் வைக்கம்போது இயற்கையக பழுக்கும் செயல்முறையில் மாற்றம் ஏற்படுத் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.