இதே நாளில் அன்று| Dinamalar

மார்ச் 3, 1847

அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஐரோப்பிய நாடான ஸ்காட்லாண்டில், 1847 மார்ச் 3ம் தேதி பிறந்தார். இவர் தந்தை, அலெக்சாண்டர் மெல்வில்லி பெல், கண், உதடு அசைவுகளை வைத்து, மற்றவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ளும் திறன் படைத்தவர். அதே திறனுடன் வளர்ந்த கிரகாம் பெல், 8 வயதிலேயே பியானோ வாசிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். படிப்பில் ஆர்வம் இன்றி, ஒலி அலைகளை பற்றி ஆராய்ச்சி செய்வதில் நாட்டம் செலுத்தினார். காது கேளாதோருக்கு, கண், கை அசைவு மூலம் வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தார். அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக் கழகம், பேச்சு அங்கவியல் பேராசிரியராக, இவரை பணியில் அமர்த்தியது.
பியானோவில் ஒலி எழுப்பி, அந்த ஓசையை, குறிப்பிட்ட தொலைவுக்கு, மின்சாரம் மூலம் அனுப்பினார் பெல்; 18 வயதில், பேச்சை அனுப்பும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தான் கண்டுபிடித்த தொலைபேசியை, ஒரு கண்காட்சியில் வைத்தார். பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு பார்த்து பயன்படுத்திய பின், அது உலக அளவில் பிரபலம் அடைந்தது.
கடந்த, 1922 ஆகஸ்ட் 2ல், தன் 75வது வயதில் காலமானார். தொலைபேசி, பார்வையற்றோர் படிக்க வசதியாக, ‘பிரெய்லி’ உட்பட பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு அர்ப்பணித்த கிரகாம் பெல், பிறந்த தினம் இன்று!

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.