உக்ரைன் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளதா.. இந்தியா கூறுவது என்ன..!!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி நடந்து வரும் நிலையில், அண்டை நாடான கார்கிவ் நகரில் ஏராளமான இந்திய மாணவர்களை, உக்ரைன் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன்  தொடர்பு கொண்டு பேசிய நிலையில், உக்ரைனில் குறிப்பாக கார்கிவில் பல இந்திய மாணவர்கள்  சிக்கித் தவிக்கின்றனர் என செய்தி வெளியானது. 

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்கு,  பதிலளித்த அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்  அரிந்தம் பாக்சி  கூறுகையில், “உக்ரைனில் உள்ள எங்கள் தூதரகம் உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பல மாணவர்கள் நேற்று கார்கிவ் நகரை விட்டு வெளியேறியுள்ளனர். கார்கிவ் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலிருந்து மாணவர்களை நாட்டின் மேற்குப் பகுதிக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்வதில் உக்ரேனிய அதிகாரிகள் ஆதரவு அளித்தனர்.

மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்

மீட்பு நடவடிக்கையில், ரஷ்யா, ருமேனியா, போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் திறம்பட ஒருங்கிணைத்து வருகிறோம். கடந்த சில நாட்களாக உக்ரைனில் இருந்து ஏராளமான இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

இதை சாத்தியமாக்கிய உக்ரேனிய அதிகாரிகளின் உதவியை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். மேலும் இந்திய குடிமக்களுக்கு  இடமளித்து ஆதரவு தந்த உக்ரைனின் மேற்கத்திய அண்டை நாடுகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் எனவும் அவர் மேலும் கூறினார்.

முன்னதாக “ உக்ரைன் அதிகாரிகள் உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேறி பெல்கோரோட் செல்ல விரும்பும் இந்திய மாணவர்களின் பெரும் குழுவை கார்கிவில் வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துள்ளனர். அவர்கள்பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்… இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ரஷ்ய ஆயுதப்படைகள் தயாராக உள்ளனர்”  என ரஷ்யா கூறியதாக செய்தி வெளியானது

மறுபுறம், உக்ரைன் வெளியுறவு அமைச்சகம், இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை  ரஷ்யா பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது என்று குற்றம் சாட்டியது.

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.