ஒரே ஒரு "மிஸ்ஸைல்".. மொத்த பில்டிங்கும் காலி.. பற்றி எரியும் கார்கிவ் போலீஸ் தலைமையகம்!

உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யத் தாக்குதல் வேகம் பிடித்துள்ளது. அந்த நகரில் உள்ள பல அடுக்கு மாடிகளைக் கொண்ட போலீஸ் தலைமயைகத்தை ரஷ்யப் படையினர் ஏவுணை மூலம் தாக்கி அழித்தனர். மொத்த கட்டடமும் பெரும் சேதமடைந்துள்ளது பல மாடிகள் நொறுங்கிப் போய் விட்டன. கட்டடமே பற்றி எரிந்து வருகிறது.

கீவ் நகருக்கு அடுத்த பெரிய நகரம் கார்கிவ் தான். இங்குதான் தற்போது ரஷ்யப் படைகள் கடுமையாக தாக்கி வருகின்றன. இந்த நகரை விட்டு பல ஆயிரம் பேர் ஏற்கனவே வெளியேறி விட்டனர். தற்போது ரஷ்யா ஏவுகணைகள் மூலம் இந்த நகரை தகர்த்து வருகிறது. பல முக்கியக் கட்டடங்கள் ஏற்கனவே தரைமட்டமாகி விட்டன.

இந்த நிலையில் இன்று அங்குள்ள போலீஸ் தலைமையகக் கட்டடம் தாக்குதலுக்குள்ளானது. பல மாடிக் கட்டடம் அது. அந்தக் கட்டடம் மீது ஏவுகணை வீசி ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் பல மாடிகள் நொறுங்கி விட்டன. கட்டடமே தீப்பிடித்து எரிந்து வருகிறது.

வாய் தவறி உளறிய பிடன்.. “அயோ தப்பு தப்பு”.. கமலா கண்ணு எப்படி போகுது பாருங்க..!

இதுகுறித்து உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆன்டன் கெரஸ்சென்கோ கூறுகையில், இந்தக் கட்டடத்தின் மீது ரஷ்யப் படைகள்
ஏவுகணைத் தாக்குதல்
நடத்தியுள்ளன. கட்டடம் தீப்பிடித்து தஎரிந்து வருகிறது. அதேபோல கரசியான் தேசிய பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கட்டடமும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

21 பேர் பலி

இதற்கிடையே, கார்கிவ் நகரில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். 112 பேர் காயமடைந்திருப்பதாக கார்கிவ் நகர மேயர் கூறியுள்ளார். அதேசமயம், ரஷ்யத் தாக்குதலை எதிர்த்து உக்ரைனியப் படைகள் தீரமுடன் போரிட்டு வருவதாகவும், ரஷ்யர்களின் ஒவ்வொரு முயற்சியும் தகர்க்கப்படுவதாகவும் கார்கிவ் ஆளுநர் ஓலே சினிகுபோவ் கூறியுள்ளார்.

சினிகுபோவ் மேலும் கூறுகையில் ரஷ்யப் படைகளுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனியப் படைகள் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர் என்றார் அவர்.

சைடோமிர் நகரில் பெரும் தாக்குதல்

கீவ் நகருக்கு மேற்கில் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சைடோமிர் என்ற நகரும் ரஷ்யாவின் அதி வேகத் தாக்குதலில் சிக்கி சிதிலமடைந்து வருகிறது. அங்கு பொதுமக்கள் 2 பேர் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

காடுகள் வழியாக ஊருக்குள் புகுந்து.. உள்ளூர்க்காரர்களாக மாறி.. தாக்கும் ரஷ்ய ராணுவம்!

சைடோமிர் நகரில் விமானப்படைத் தளம் உள்ளது. அதைக் குறி வைத்தே ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அருகாமையில் உள்ள பல குடியிருப்புகளும் சிக்கிக் கொண்டன. ரஷ்யப் படைகள் நாலாபுறமும் தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் ராணுவம் திணறிக் கொண்டுள்ளது. இருப்பினும் ரஷ்யப் படைகளிடம் தோற்று விடக் கூடாது என்ற உறுதியுடன் அவர்கள் போராடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.