ஷாருக் கான் நடிக்கும் பதான் அறிவிப்பு வெளியானது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் ஹீரோவாக நடித்து 2018 ம் ஆண்டு வெளியான ஜீரோ திரைப்படத்திற்குப் பின் வேறு எந்த படமும் வெளியாகவில்லை.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ஷாருக் கான் நீண்ட இடைவெளிக்குப் பின் பதான் என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

ஹிந்தி மட்டுமன்றி தமிழ் மற்றும் தெலுங்கிலும் உருவாக இருக்கும் இந்த படம் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.